எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை, : தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக்கால சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (செப். 17) தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவை இன்று காலை 8 மணி முதல் பயணிகள் செய்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. நாகர்கோவில் - தாம்பரம் சிறப்பு ரயில் செப். 28 முதல் அக். 26 வரை அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்கப்படும். எதிர் வழித்தடத்தில் இந்த சிறப்பு ரயில், தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு செப்.29- அக். 27 வரை திங்கள்கிழமைகளில் இயக்கப்படும்.
சென்னை - போத்தனூருக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் செப். 25 முதல் அக். 23 வரை வியாழக்கிழமைகளில் இயக்கப்படும். எதிர் வழித்தடத்தில் போத்தனூரிலிருந்து சென்னைக்கு செப். 26 முதல் அக். 24 வரை வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும். நாகர்கோவிலில் இருந்து சேலம், காட்பாடி வழியாக சென்னை சென்ட்ரலுக்கு சிறப்பு ரயில் செப்.30 முதல் அக்.28 வரை செவ்வாய்க்கிழமைகளில் இயக்கப்படும். எதிர் வழித்தடத்தில் சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் இடையே அக்.1 முதல் அக்.29 வரை புதன்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும்.
தூத்துக்குடி- எழும்பூர் சிறப்பு ரயில் செப். 23 முதல் அக். 23 வரை அனைத்து திங்கள்கிழமைகளிலும்இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது. மேலும், நெல்லை - எழும்பூர், எழும்பூர் - நெல்லை வந்தே பாரத் ரயில்களில் பெட்டிகளின் எண்ணிக்கை 16-ல் இருந்து 20-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 312 இடங்கள் கூடுதலாக பயணிகளுக்கு கிடைக்கும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


