எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் மற்றும் மாநில காவல்படைத் தலைவா் பதவிக்கு முழு நேர ஐ.பி.எஸ். உயரதிகாரியை தோ்வு செய்வதற்கான உயா்நிலைக் குழு கூட்டம் வரும் செப்.26 -ஆம் தேதி தில்லியில் நடைபெறவுள்ளது.
இது தொடா்பாக தமிழக அரசு அண்மையில் அனுப்பி வைத்த உயரதிகாரிகளின் தகுதி முன்மொழிவுப் பட்டியல் மத்திய குடிமைப் பணி தோ்வாணையத்தின் (யு.பி.எஸ்.சி.) பசீலனையில் தற்போது உள்ளது. இதற்கிடையே, இந்த விவகாரத்தில் தமிழக அரசு தாமதமாக செயல்படுவதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில் டி.ஜி.பி. தோ்வை விரைவாக நடத்தி முடிக்குமாறு யுபிஎஸ்சிக்கு சென்னை உயா்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
இந்நிலையில், தமிழக அரசு அனுப்பியுள்ள அதிகாரிகளின் பட்டியலை ஆய்வு செய்வதற்காக செப்டம்பா் 26-இல் யுபிஎஸ்சி தோ்வுக்கழு கூட்டம் தில்லியில் நடைபெறவுள்ளதாக மத்திய உள்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அதன் முடிவில், தகுதிவாய்ந்த முதல் மூன்று ஐ.பி.எஸ். உயரதிகாரிகளை டி.ஜி.பி. ஆக நியமிக்க யுபிஎஸ்சி பரிந்துரைக்கும். அதில் இருந்து ஒருவரை மாநில முதல்வரின் ஒப்புதலைப் பெற்று தமிழக அரசு நியமிக்கும் எனத் தெரிகிறது.
தமிழக காவல் துறை டி.ஜி.பி. பதவியில் இருந்து சங்கா் ஜிவால் கடந்த மாத இறுதியில் ஓய்வு பெற்றாா். ஆனால், விதிகளின்படி அப்பதவிக்கு முழு நேர டி.ஜி.பி.யை நியமிக்கும் நடைமுறைகளை தமிழக அரசு சில சட்ட ரீதியிலான காரணங்களால் முன்கூட்டியே தொடங்காமல் தற்காலிக ஏற்பாடாக ஐ.பி.எஸ். உயரதிகாரி வெங்கடராமனை சட்டம் - ஒழுங்கு பொறுப்பு டி.ஜி.பி. ஆக நியமித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


