எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
டோனியின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில் 41 அடி உயர கட்-அவுட்டை ரசிகர்கள் அமைத்துள்ளனர். அமராவதி, கிரிக்கெட் உலகில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர் தான் மகேந்திர சிங் டோனி. தல, மகி என ரசிகர்கள் இவரை செல்லமாக அழைப்பார்கள். சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து வந்த டோனி 2007-ம் ஆண்டு இந்திய அணிக்கு கேப்டனானார். அவர் தலைமையில் இந்திய அணி 3 ஐசிசி கோப்பைகளை வென்று அசத்தியுள்ளது.
அதோடு, 28 ஆண்டுகளுக்குப் பிறகு 2011-ம் ஆண்டு உலகக்கோப்பையையும் வென்று இந்தியாவின் கனவை நினைவாக்கினார். இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். டோனியின் 41-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் டோனியின் 41 அடி உயர கட்-அவுட்டை ரசிகர்கள் அமைத்து உள்ளார்.
________________
பிவி சிந்துவிடம் வருத்தம் தெரிவித்த ஆசிய பேட்மிண்டன் கூட்டமைப்பு
பிலிப்பைன்சில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் பெண்கள் ஒற்றையர் அரைஇறுதியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-13, 19-21, 16-21 என்ற செட் கணக்கில் ஜப்பானின் அகானே யமாகுச்சியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இந்த ஆட்டத்தில் முதல் செட்டை கைப்பற்றிய சிந்து 2-வது செட்டில் 14-11 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது போட்டி நடுவர் சிந்துவுக்கு ஒரு புள்ளியை அபராதமாக விதித்தார். அதாவது அந்த புள்ளி எதிராளி கணக்கில் சேர்க்கப்பட்டது. சர்வீஸ் செய்ய சிந்து அதிக நேரம் எடுத்து கொண்டதாக கூறி நடுவர் இந்த நடவடிக்கையை எடுத்தார். எதிராளி தயாராக இல்லாததால் சர்வீஸ் செய்யவில்லை என்று சிந்து கூறிய விளக்கத்தை நடுவர் ஏற்க மறுத்து விட்டார்.
நடுவரின் முடிவை எதிர்த்து தலைமை நடுவரிடம் அப்பீல் செய்தும் பலன் இல்லை. அதன் பிறகு விரக்தியில் ஆடிய சிந்து அந்த ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தார். தனக்கு இழைக்கப்பட்ட தவறான தண்டனை குறித்து சிந்து உலக பேட்மிண்டன் சம்மேளனம் மற்றும் ஆசிய பேட்மிண்டன் கூட்டமைப்புக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்த நிலையில் ஆசிய போட்டியில் நடுவரின் தவறான முடிவுக்கு ஆசிய பேட்மிண்டன் கூட்டமைப்பின் டெக்னிக்கல் கமிட்டி சேர்மன் சிக் ஷின் சென், சிந்துவிடம் வருத்தம் தெரிவித்து இருக்கிறார்.
__________________
ரிக்கி பாண்டிங், ஸ்டீவ் ஸ்மித் சாதனையை தகர்த்த ஜோரூட்
இந்தியா - இங்கிலாந்து அணிகள் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்த தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. 5-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அபாரமாக விளையாடி வெற்றி பெற்றது. இதற்கு முன்பு நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் வீழ்த்தியது. அதை தொடர்ந்து இந்திய அணியையும் வீழ்த்தியுள்ளது. இந்த தொடரின் மூலம் ஜோரூட் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஜோரூட் 737 ரன்கள் எடுத்துள்ளார். இந்த தொடரில் ஜோரூட் 4 சதங்களை விளாசியுள்ளார். 5-வது போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் ஜோரூட் சதம் அடித்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 28-வது சதத்தை பதிவு செய்தார். ஸ்டீவ் ஸ்மித் மற்றும் விராட் கோலி 27 சதம் அடித்துள்ளனர். கோலி தனது 27-வது சதத்தை பதிவு செய்த போது ரூட் 16 சதங்களை மட்டுமே அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக ஸ்மித் (8), ரிக்கி பாண்டிங் (8), ரிச்சர்ட்ஸ்(8) மற்றும் கேரி சோபர்ஸ் (8) ஆகியோரின் சாதனையை ஜோரூட் தகர்த்துள்ளார்.
_________________
ஜோரூட்-ஜானி பேர்ஸ்டோவுக்கு வாழ்த்து தெரிவித்த டெண்டுல்கர்
இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த போட்டியில் 378 ரன்களை இங்கிலாந்து அணி சேசிங் செய்து சாதனை படைத்தது. இரண்டாவது இன்னிங்சில் ஜானி பேர்ஸ்டோவ் - ஜோரூட் சதம் அடித்து அசத்தினர். இந்நிலையில் ஜோ ரூட் மற்றும் ஜானி பேர்ஸ்டோவின் சிறப்பான பேட்டிங் ஆட்டத்தை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:- இந்திய அணிக்கு எதிரான சிறப்பான வெற்றியை பதிவு செய்த இங்கிலாந்து அணி தொடரை சமன் செய்துள்ளது. ஜோரூட் -ஜானி பேர்ஸ்டோவ் சிறப்பான ஃபார்மில் இருந்து பேட்டிங்கை மிகவும் எளிதாக்கியுள்ளனர். உறுதியான வெற்றியைப் பெற்ற இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள். மேலும் ஒரு முன்னாள் வீரர் இருவரையும் பாராட்டியுள்ளார். இந்திய அணியின் தொடக்கக்காரரான வாசிங் ஜாபர் கூறியதாவது:- இரண்டு பேருக்கும் போதிய பாராட்டு இல்லை. ஜோரூட் இப்போது சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன். ஆனால் ஜானி பேர்ஸ்டோவ் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சவாலை எதிர்கொண்ட விளையாடிய விதம் சிறப்பாக இருந்தது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
___________________
இந்திய டி20 அணிக்கு எச்சரிக்கை விடுத்த இங்கிலாந்து கேப்டன்..!
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் முடிவடைந்த நிலையில் டி20 மற்றும் ஒருநாள் தொடர் நடக்கவுள்ளது. முதலில் டி20 போட்டிகள் இன்று முதல் தொடங்க உள்ளது. இரு அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி சவுத்தம்டனில் இன்று (7-ந் தேதி) நடக்கிறது. இந்நிலையில் இந்திய டி20 அணிக்கு இங்கிலாந்து அணியின் புதிய கேப்டனான பட்லர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:- எட்ஜ்பாஸ்டனில் இங்கிலாந்து அணியின் வெற்றி நம்பமுடியாத வகையில் இருந்தது. இந்த டெஸ்ட் அணியில் இருந்து சிறப்பான ஆட்ட நுணுக்கங்களை பெறுவதுடன் இங்கிலாந்து அணியின் வெற்றிப் பயணம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார். இங்கிலாந்து அணியின் ஒருநாள் மற்றும் டி20 அணியின் புதிய கேப்டனாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
எஸ்.ஐ.ஆர் பணிகளில் குழப்பம்: என்.ஆர்.இளங்கோ குற்றச்சாட்டு
05 Nov 2025சென்னை: எஸ்.ஐ.ஆர். பணியில் கணக்கீட்டு படிவங்கள் வழங்கவில்லை என்று என்.ஆர்.இளங்கோவன் தெரிவித்தார்.
-
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு
05 Nov 2025மும்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது.
-
ஒரு சவரன் தங்கம் விலை ரூ.90 ஆயிரத்திற்கு கீழ் சரிவு
05 Nov 2025சென்னை, தங்கம் விலை நேற்றும் சரிவை சந்தித்துள்ளது.
-
எங்களுக்கு சூழ்ச்சி தெரியவில்லை: கரூர் சம்பவம் குறித்து ஆதவ் அர்ஜுனா பேச்சு
05 Nov 2025சென்னை: எங்களுக்கு சூழ்ச்சி தெரியவில்லை கரூர் சம்பவம் குறித்து ஆதவ் அர்ஜுனா பேசினார்.
-
கருணை அடிப்படையிலான அரசு பணிக்கு விண்ணப்பம் தமிழக அரசாணை வெளியீடு
05 Nov 2025சென்னை: கருணை அடிப்படையிலான அரசு பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அரசாணை வெளியிட்டது.
-
பியூஷ் கோயல் நியூசிலாந்து பயணம்
05 Nov 2025வெலிங்டன்: மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயலை நியூசிலாந்து சென்றார்.
-
புதுச்சேரியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் துவக்கம்
05 Nov 2025புதுச்சேரி: புதுச்சேரியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் தொடங்கியுள்ளது.
-
முதல் மனைவி சம்மதம் இல்லாமல் இஸ்லாமிய ஆண்கள் 2-வது திருமணம் செய்ய முடியாது கேரள உயர் நீதிமன்றம் கருத்து
05 Nov 2025திருவனந்தபுரம்: இஸ்லாமிய சட்டத்தின்படி ஒரு ஆண் 2-வது திருமணம் செய்து கொள்வதற்கு பல்வேறு நிபந்தனைகள் உள்ளதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.;
-
சின்சினாட்டி மேயர் தேர்தல்: ஜே.டி.வான்ஸ் சகோதரரை தோற்கடித்தார் அஃப்தாப்
05 Nov 2025சின்சினாட்டி, அமெரிக்காவின் சின்சினாட்டி மேயர் தேர்தலில் துணை அதிபர் ஜே.டி. வான்ஸின் சகோதரர் கோரி போமனை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஃப்தாப் புரேவல் தோற்கடித்துள்ளார்.
-
ரூ.23 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட திருச்செங்கோடு அரசு மருத்துவமனையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
05 Nov 2025சென்னை, ரூ.23 கோடி செலவில் தரை மற்றும் நான்கு தளங்கள் கொண்ட புதிய மருத்துவக் கட்டிடத்துடன் 225 படுக்கை வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட திருச்செங்கோடு அரசு மருத்துவமனையை முத
-
வாக்கு திருட்டு விவகாரம்: ராகுலுக்கு கிரண் ரிஜிஜு பதில்
05 Nov 2025புதுடெல்லி: வாக்கு திருட்டு விவகாரத்தில் ராகுல்காந்தி பொய்யான குற்றச்சாட்டுகளைப் பரப்பி வருகிறார் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
-
பீகாரில் 121 தொகுதிகளில் இன்று முதல் கட்ட தேர்தல்: ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகள் தயார்
05 Nov 2025பாட்னா, பீகாரில் 121 தொகுதிகளில் இன்று முதல் கட்ட சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
-
போதைப்பொருள் கடத்தி வந்த படகு மீது அமெரிக்கா தாக்குதல் - 2 பேர் பலி
05 Nov 2025வாஷிங்டன்: போதைப்பொருள் கடத்தி வந்த படகு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதில் 2 பேர் உயிரிழந்தனர்.
-
ஜனநாயகத்தை அழிக்கும் புதிய ஆயுதம் சிறப்பு தீவிர திருத்தம்: ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு
05 Nov 2025புதுடெல்லி, வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்தம் என்பது ஜனநாயகத்தை அழிக்க பா.ஜ.க.வின் புதிய ஆயுதம் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பகிரங்கமாகக் குற்றம்சாட்டிய
-
கோவாவில் பாக்., ஆதரவு கோஷங்கள் - 9 பேர் கைது
05 Nov 2025பனாஜி: கோவாவில் பாகிஸ்தான் ஆதரவு கோஷங்கள் எழுப்பிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
வரும் 2026 சட்டசபை தேர்தலில் த.வெ.க.வுக்கு 100 சதவீத வெற்றி சிறப்பு பொதுக்குழுவில் விஜய் பேச்சு
05 Nov 2025சென்னை: 2026 சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகத்திற்கு 100 சதவீத வெற்றி நிச்சயம் என்று பொதுக்குழுவில் விஜய் பேசினார்.
-
தென்னாப்பிரிக்கா 'ஏ' அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விராட் கோலி, ரோகித் விளையாட வாய்ப்பில்லை
05 Nov 2025மும்பை: தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா விளையாட வாய்ப்பில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
இந்த மாத இறுதியில் புயலுக்கு வாய்ப்பு
05 Nov 2025சென்னை: தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக இந்த மாத இறுதியில் புயலுக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்கா: சரக்கு விமானம் விழுந்து விபத்து - 3 பேர் பலி
05 Nov 2025வாஷிங்டன்: அமெரிக்காவில் சரக்கு விமானம் தரையில் விழுந்து விபத்து விபத்து ஏற்பட்டதில் 3 பேர் உயிரிழந்தனர்.
-
அரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்: ஆதாரங்களுடன் ராகுல் குற்றச்சாட்டு
05 Nov 2025புதுடெல்லி, அரியாணா மாநில வாக்காளர் பட்டியலில் பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடல் பெண் ஒருவரின் புகைப்படத்தைப் பயன்படுத்தி பல போலி வாக்காளர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர் என்று
-
கரூர் கூட்ட நெரிசல்: 3 காவல் உதவி ஆய்வாளர்களிடம் சி.பி.ஐ. விசாரணை
05 Nov 2025கரூர்: கரூர் கூட்ட நெரிசல்: 3 காவல் உதவி ஆய்வாளர்களிடம் சி.பி.ஐ. மீண்டும் விசாரணை நடத்தியது.
-
ஏலம் போகாத தாவூத் இப்ராஹிம் சொத்துகள்
05 Nov 2025மும்பை: கடந்த பத்தாண்டுகளில் முதல் முறையாக, தாவூத் இப்ராஹிமுக்குச் சொந்தமான சொத்துகள் குறைந்தவிலையில் ஏலம் விடப்பட்டும் கூட, ஏலம் எடுக்க ஒருவர்கூட முன்வராதது பேசுபொருளா
-
ஸ்மிருதி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ராதாவுக்கு தலா ரூ.2.25 கோடி மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு
05 Nov 2025மும்பை: மகளிர் ஒருநாள் உலக கோப்பை வென்றதற்காக மகாராஷ்டிர வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ராதா யாதவுக்கு அம்மாநில அரசு தலா ரூ.2.25 கோடி பரிசுத் தொகையை அ
-
சத்தீஷ்கார் ரயில் விபத்து: பலி 11 ஆக அதிகரிப்பு
05 Nov 2025ராய்ப்பூர்: சத்தீஷ்கார் ரயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
-
ஐ.சி.சி.யின் செயலால் சர்ச்சை
05 Nov 2025மகளிர் ஒரு நாள் உலக கோப்பைத் தொடரில் இந்திய அணியின் வெற்றிக்குப் பங்காற்றிய தொடக்க ஆட்டக்காரர் பிரதிகா ராவலுக்கு பதக்கம் வழங்காத சம்பவம் சர்ச்சையாகியுள்ளது.


