முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டுவிட்டரில் பதிவிடக்கூடாது: பத்திரிகையாளர் முகமது ஜூபைருக்கு சுப்ரீம் கோர்ட் நிபந்தனை ஜாமீன்

வெள்ளிக்கிழமை, 8 ஜூலை 2022      இந்தியா
Supreme-Court 2021 07 19

Source: provided

புதுதில்லி : பத்திரிகையாளர் முகமது ஜூபைருக்கு நிபந்தனை ஜாமீன்  வழங்கி சுப்ரீம் கோர்ட் உத்திரவிட்டுள்ளது.

டுவிட்டரில் புதிய பதிவுகளை பதிவிடக் கூடாது என்ற நிபந்தனையுடன் ஜாமீன் அளித்து சுப்ரீம் கோர்ட் உத்திரவிட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் சிதாப்பூர் நீதிமன்ற எல்லைப்பகுதியை விட்டு முகமது ஜூபைர் செல்லக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. முகமது ஜூபைருக்கு 5 நாட்கள் இடைக்கால ஜாமின் வழங்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

முகமது ஜூபைர் இந்து கடவுளுக்கு எதிராக 2018 ஆம் ஆண்டில் பதிவிட்ட ஆட்சேபத்திற்குரியதாக கூறப்படும் ட்விட்டா் பதிவு தொடா்புடைய வழக்கில் சிறையில் உள்ளார். அவருக்கு சுப்ரீம் கோர்ட் நிபந்தனை ஜாமீன்  வழங்கி உள்ளது.

ஆனால், இந்த ஜாமின் உத்தரவு தில்லி காவல் துறையால் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கிற்கு பொருந்தாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தில்லி காவல் துறை பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் ஜூபைர் சிறையில் உள்ளதால், இந்த வழக்கில் ஜாமின் கிடைத்தபோதும் அவர் தொடர்ந்து சிறையிலேயே இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து