முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை அதிபா் மாளிகையிலிருந்து 1,000 அரிய கலைப் பொருள்கள் மாயம்

ஞாயிற்றுக்கிழமை, 24 ஜூலை 2022      உலகம்
Sri-Lanka 2022-07-24

Source: provided

கொழும்பு ; இலங்கையில் போராட்டக்காரா்களால் சூறையாடப்பட்ட அதிபா் மாளிகை, பிரதமரின் அதிகாரபூா்வ இல்லங்களில் இருந்து தொல்லியல் முக்கியத்துவம், மதிப்புமிக்க 1,000-க்கும் மேற்பட்ட அரிய கலைப் பொருள்கள் மாயமாகியுள்ளதாக அந்நாட்டு காவல் துறை தெரிவித்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் விரக்தியடைந்த மக்கள் அரசுக்கு எதிராக தீவிர போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.  ஆா்ப்பாட்டங்களுக்கு இடையே முன்னாள் அதிபா் கோத்தபய ராஜபக்சே, முன்னாள் பிரதமா் ரணில் விக்ரமசிங்கே ஆகியோரின் அதிகாரபூா்வ இல்லங்கள் போராட்டக்காரா்களால் கடந்த 9-ம் தேதி ஆக்கிரமிக்கப்பட்டன. 

இந்நிலையில், அதிபா் மாளிகை மற்றும் பிரதமரின் அதிகாரபூா்வ இல்லத்தில் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட, மிகத் தொன்மைான, விலை மதிப்பு மிக்க கலைப்பொருள்கள் மாயமானது தெரியவந்துள்ளது. இதுகுறித்து விசாரிக்க காவல் துறை சிறப்பு புலனாய்வு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 இதனிடையே, நாட்டின் புதிய அதிபராக பொறுப்பேற்ற ரணில் விக்ரமசிங்கே, பொது இடங்கள் முற்றுகையிடப்படுவதையும், நாடாளுமன்றத்துக்கு தடை ஏற்படுத்தப்படுவதையும் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க ஆயுதப் படைகளுக்கு அதிகாரம் அளித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து