எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கன மழை காரணமாக 10 மாவட்டங்களில் 49 நிவாரண முகாம்களில் 4 ஆயிரம் பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பெய்து வரும் கன மழையை ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, "தென் மேற்கு பருவமழைக் காலத்தில், 01-06-2022 முதல் 04-08-2022 முடிய 256.3 மி.மீ. மழை பெய்துள்ளது. இது இயல்பான மழை அளவைக் காட்டிலும் 99 விழுக்காடு கூடுதல் ஆகும். கடந்த 24 மணி நேரத்தில், 35 மாவட்டங்களில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ள நிலையில் மாநில சராசரி 10.59 மி.மீ ஆகும்.
நீலகிரியில் 67.50 மி.மீ, ஈரோட்டில் 9.73 மி.மீ, கோயம்புத்தூரில் 53.46 மி.மீ, திருப்பூரில் 8.46 மி.மீ, தருமபுரியில் 38.63 மி.மீ, திருவள்ளூரில் 8.40 மி.மீ, திருவண்ணாமலையில் 23.27 மி.மீ, கள்ளக்குறிச்சியில் 8.40 மி.மீ, தேனியில் 15.68 மி.மீ, சேலத்தில் 6.53 மி.மீ, கிருஷ்ணகிரி 12.52 மி.மீ, வேலூரில் 6.30 மி.மீ, விழுப்புரத்தில் 12.24 மி.மீ, தென்காசியில் 6.30 மி.மீ, திண்டுக்கலில் 10.41 மி.மீ, திருவாரூரில் 5.54 மி.மீ மழை பதிவாகி உள்ளது.
தர்மபுரி, ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, மயிலாடுதுரை, நாமக்கல், சேலம், தஞ்சாவூர் , நீலகிரி, திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் 49 நிவாரண முகாம்களில் 4 ஆயிரம் பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள நபர்களுக்கு உணவு, பாதுகாப்பான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
5-ம் தேதி அன்று குமரிமுனை, மன்னார் வளைகுடா மற்றும் தெற்கு வங்கக் கடல் பகுதிகளில், மணிக்கு 45 முதல் 65 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இந்தப் பகுதிகளில் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், இந்த எச்சரிக்கை செய்தி, மீன்வளத் துறை மூலமாக மீனவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் உத்தரவின் பேரில், அதி கனமழைப் பொழிவு ஏற்பட வாய்ப்புள்ள மாவட்டங்களின் கண்காணிப்பு அலுவலர்கள் தொடர்புடைய மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேட்டூர் அணையிலிருந்து நேற்று காலை 8.45 மணி முதல் 1,80,000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதால் பாதிப்பிற்குள்ளாகும் மாவட்டங்களுக்கு விரைந்து சென்று உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு கண்காணிப்பு அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பவானிசாகர் அணையிலிருந்து விநாடிக்கு 7,000 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுவதால், ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு கருதி, பொதுவான எச்சரிக்கை நடைமுறை மூலம் 89,692 செல்லிடப்பேசிகளுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளது.
பேரிடர் தொடர்பான தகவல்களை துறை அலுவலர்களுக்கும், பொது மக்களுக்கும் தெரிவிக்கும் வகையில், மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையமும், மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையங்களும் 24 மணி நேரமும் கூடுதலான அலுவலர்களுடன் செயல்பட்டு வருகின்றன. பொதுமக்கள் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையத்தை முறையே 1070 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி வாயிலாகவும், வாட்ஸ் அப் எண். 94458 69848 மூலமாகவும் புகார்களை பதிவு செய்யலாம்.
கன மழையின் போது தேடல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து ஈடுபடும் பொருட்டு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 2 குழுக்களும், நீலகிரி மாவட்டத்தில் 2 குழுக்களும், நாமக்கல் மாவட்டத்தில் 1 குழுவும், ஆக மொத்தம் 110 வீரர்களைக் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படையின் 5 குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர். மேலும், திருச்சிராப்பள்ளி, ஈரோடு, நாமக்கல், கன்னியாகுமரி, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 238 வீரர்களைக் கொண்ட 6 குழுக்களும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
மேலும், கனமழையின் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை தவிர்த்திட தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதுமட்டுமின்றி, பாதிப்பு ஏற்படக் கூடிய இடங்களில் ஜே.சி.பி. இயந்திரங்கள், மரம் அறுப்பான்கள் உள்ளிட்ட உபகரணங்களுடன் பல்துறை மண்டல குழுக்களையும், மீட்புக் குழுக்களையும், நிவாரண முகாம்களையும் தயார் நிலையில் வைத்திட மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கன மழை எச்சரிக்கையினைத் தொடர்ந்து ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அரசு மற்றும் மாவட்ட நிருவாகம் மூலம் வழங்கப்படும் முன்னெச்சரிக்கை செய்திகளை கூர்ந்து கவனித்து செயல்படுமாறும், மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 5 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
தங்கம் விலை மேலும் சரிவு
16 Jul 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ஒரு சவரன் ரூ.72,800-க்கு விற்பனையானது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-07-2025.
16 Jul 2025 -
விஜய் சேதுபதி - நித்யா மேனன் நடிக்கும் 'தலைவன் தலைவி'
16 Jul 2025சத்யஜோதி பிலிம்ஸ் டி ஜி தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் - அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி - நித்யா மேனன் நடித்திருக்கும்
-
டிஜே அருணாச்சலம் நடிக்கும் உசுரே
16 Jul 2025ஸ்ரீகிருஷ்ணா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் உசுரே படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
-
டிராகன் நூறாவது நாள் வெற்றி விழா
16 Jul 2025ஏ.ஜி.எஸ். தயாரிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், நடிப்பில் வெளியான படம் டிராகன் திரைப்படம் நூறாவது நாளைக் கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது.
-
உருட்டு உருட்டு' பட இசை வெளியீட்டு விழா
16 Jul 2025ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ், சாய் காவியா மற்றும் சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில் பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், உருவாகியுள்ள படம் உருட
-
AI தொழில்நுட்பத்தில் பன் பட்டர் ஜாம்
16 Jul 2025பன் பட்டர் ஜாம் படத்தின் Veo3 AI எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளார். Veo3 AI என்பது, இயற்கையான தோற்றம் மற்றும் சினிமா தரம் கொண்ட வீடியோக்களை உருவாக்க
-
ஆகஸ்ட் 25-ல் மதுரையில் நடைபெறுகிறது: த.வெ.க.வின் 2-வது மாநில மாநாடு: விஜய் அறிவிப்பு
16 Jul 2025சென்னை, தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, வருகிற ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி (25.08.2025) திங்கட்கிழமை அன்று மதுரையில் நடைபெற உள்ளது என அக்கட்சியின் தலைவர் வ
-
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 8 புதிய அறிவிப்புகள் வெளியீடு
16 Jul 2025மயிலாடுதுறை, மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 8 புதிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
வள்ளிமலை வேலன் இசை வெளியீட்டு விழா
16 Jul 2025எம் என் ஆர் பிக்சர்ஸ், எம் நாகரத்தினம் தயாரித்து நடிக்க, எஸ் மோகன் எழுதி இயக்க, கிராமத்துக் கதைக்களத்தில் கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள படம், வள்ளிமலை வேலன்.
-
துருவ் சர்ஜா நடிக்கும் 'கே.டி-தி டெவில்'
16 Jul 2025துருவ் சர்ஜா நடிப்பில் இயக்குநர் பிரேம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் கே.டி.
-
ஜென்ம நட்சத்திரம் இசை வெளியீட்டு விழா
16 Jul 2025அமோகம் ஸ்டுடியோஸ் விஜயன் தயாரிப்பில் மணிவர்மன் இயக்கத்தில் தமன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ’ஜென்ம நட்சத்திரம்.
-
மீனாட்சி ஆனந்த் தயாரிக்கும் 'டிரெண்டிங்'
16 Jul 2025ராம் ஃபிலிம் பேக்டரி சார்பில், தயாரிப்பாளர் மீனாட்சி ஆனந்த் தயாரிப்பில், சிவராஜ் இயக்கத்தில், கலையரசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ’டிரெண்டிங்’.
-
ரூ.2.4 கோடிக்கு ஆன்லைன் ஷாப்பிங் செய்த மூதாட்டி..!
16 Jul 2025பீஜிங், சீனாவின் ஜியாடிங் பகுதியை சேர்ந்த 66 வயது மூதாட்டி ஒருவர் ஆன்லைனில் மூலம் ரூ.2.4 கோடிக்கு ஷாப்பிங் செய்தார்.
-
மாநிலங்களவை எம்.பியாக பதவியேற்பு: ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற நடிகர் கமல்ஹாசன்
16 Jul 2025சென்னை, மாநிலங்களவை எம்.பியாக வரும் 25-ம் தேதி பதவியேற்கவுள்ள நிலையில், மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட சான்றிதழை சக நடிகரும், தனது நண்பருமான ரஜினிகாந்திடம்
-
மற்ற வீரர்களுடன் இணைந்து பணியாற்றியது சிறந்த அனுபவம்: சுபான்ஷு சுக்லா பதிவு
16 Jul 2025வாஷிங்டன், சர்வதேச விண்வெளி நிலையத்தில் மற்ற வீரர்களுடன் இணைந்து பணியாற்றியது சிறப்பாக இருந்ததாக தெரிவித்துள்ள இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, என் மீதும், என் பண
-
அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து முதல்வர் பினராயி கேரளா திரும்பினார்
16 Jul 2025திருவனந்தபுரம் : அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து கேரளா முதல்வர்பினராய் விஜயன் திரும்பினார்.
-
ஈரான் பயணத்தை தவிர்க்குமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தல்
16 Jul 2025தெஹ்ரான் : அத்தியாவசியமற்ற ஈரான் பயணத்தை தவிர்க்குமாறு அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் இந்தியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
-
சென்னை, தேனி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
16 Jul 2025சென்னை, தமிழகத்தில் சென்னை,நீலகிரி, தேனி, தென்காசி, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
'ஃப்ரீடம்' திரைவிமர்சனம்
16 Jul 2025சசிகுமார் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் 1991 ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து படகு மூலம் தமிழகத்துக்கு வருகிறார்கள். அவர்கள் ராமேஸ்வரம் முகாமில் தங்க வைக்கப்படுகிறார்கள்.
-
'தேசிங்குராஜா-2' திரைவிமர்சனம்
16 Jul 2025காவல் ஆணையராக இருக்கும் விமல், குற்றவாளிகளுக்கு துணை போவதோடு காவல்துறைக்கே களங்கமாக இருக்கிறார். அவரது நண்பரான ரவுடி ஜனா, அமைச்சர் மகனை கொல்லப்போவதாக சவால் விடுகிறார்.
-
ரசிகர்களுக்கு நன்றி சொன்ன '3 BHK' படக்குழு
16 Jul 2025சாந்தி டாக்கீஸ், தயாரிப்பாளர் அருண் விஸ்வா தயாரிப்பில் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள '3 BHK' திரைப்படம் ஜூலை 4 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
-
ரஷ்யாவிடம் வர்த்தகம் செய்தால்... இந்தியா, சீனா, பிரேசிலுக்கு நேட்டோ கடும் எச்சரிக்கை
16 Jul 2025வாஷிங்டன், பிரேசில், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் ரஷ்யாவுடன் தொடர்ந்து வணிகம் செய்தால் கடுமையான பொருளாதாரத் தடைகளை சந்திக்க நேரிடும் என்று நேட்டோ பொதுச் செயலாளர் ம
-
கூட்டணியைப் பொருத்தவரை நான் சொல்வதே இறுதியானது: எடப்பாடி பழனிசாமி விளக்கம்
16 Jul 2025சிதம்பரம், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்று அமித்ஷா சொல்லவில்லை. எங்கள் கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்றுதான் சொன்னார்.
-
குழந்தைகளின் ஆதாரை புதுப்பிக்க அறிவுறுத்தல்
16 Jul 2025சென்னை : குழந்தைகளின் ஆதாரை புதுப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.