முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கும்கி 2 திரைவிமர்சனம்

திங்கட்கிழமை, 17 நவம்பர் 2025      சினிமா
Kumki-2-Review 2025-11-17

Source: provided

நாயகன் மதி, மலை காட்டில் குழியில் சிக்கிக் கொண்ட குட்டி யானை ஒன்றை காப்பாற்றி வளர்க்கிறார். அந்த யானை ஒருநாள் திடீரென்று மாயமாகி விடுகிறது. யானையை தேடி அலைந்து சோர்ந்து போய், ஒரு கட்டத்தில் அதனை மறந்து கல்லூரிக்கு படிக்க சென்று விடுகிறான். 5 வருடங்களுக்குப் பிறகு யானை பற்றிய தகவல் வர, அந்த தகவலை வைத்து யானையை தேடி செல்கிறான். இறுதியில் அவனுக்கு யானை கிடைத்ததா?, யானை மாயமானதன் பின்னணி என்ன? என்பது தான் ‘கும்கி 2’.  நாயகனாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் மதி, ஹீரோவுக்கான அனைத்து அம்சங்களுடனும் நேர்த்தியாக நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருக்கிறார். ஷ்ரிதா ராவ், ஆண்ட்ரூஸ், அர்ஜுன் தாஸ், ஆகாஷ், போலீஸ் ஹரிஷ் பெராடி உள்ளிட்ட அனைவரும் சிறந்த நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். நிவாஸ் கே.பிரசன்னா இசையில் பாடல்கள் சுமார் ரகம். எம்.சுகுமாரின் கேமரா மொழி வழக்கம் போல் வியக்க வைக்கிறது . இயக்குநர் பிரபு சாலமனுக்கு வனமும், யானையும் புதிதல்ல என்பது போல், பார்வையாளர்களுக்கும் இந்த கதை புதிதல்ல என்பதாக இப்படம் வெளி வந்துள்ளது.  நாயகனுக்கும், யானைக்கும் இடையே இருக்கும் பாசப்போரட்டத்துடன் திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தி இருந்தால் படம் நிச்சயம் வென்றிருக்கும். மொத்தத்தில், கும்கி 2 வை ஒரு முறைப் பார்க்கலாம்.,

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து