முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கள்ளக்குறிச்சி, கனியாமூர் தனியார் பள்ளி கலவர வழக்கில் கைதான 72 பேருக்கு ஜாமீன்: 174 பேரின் மனுக்கள் மீது இன்று விசாரணை

செவ்வாய்க்கிழமை, 9 ஆகஸ்ட் 2022      தமிழகம்
Kallakurichi 2022-08-09

கள்ளக்குறிச்சி சின்னசேலம் அருகே கனியாமூர் பள்ளியில் நிகழ்ந்த கலவர வழக்கில் கைதான 72 பேருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த கலவர நிகழ்வு தொடர்பாக 300-க்கும் மேற்பட்டோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் ஜாமீன் மனு தொடர்பாக நடைபெற்ற விசரணையில் 50 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் 72 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 174 பேரின் ஜாமீன் மனு இன்று விசாரிக்கபடஉள்ளது.

கள்ளக்குறிச்சி அருகே உள்ள கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் ப்ளஸ்-2 படித்து வந்த மாணவி பள்ளியின் விடுதியில் தங்கி அவர் படித்து வந்த நிலையில் திடீரென அவர் 3வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் அவரது பெற்றோர்களிடம் கூறி உள்ளது.

இதையடுத்து, அந்த மாணவியின் உறவினர்கள் நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து இளைஞர்களும், அப்பகுதி மக்களும் பள்ளி முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டம் வன்முறையாக மாறியது. அதைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் பள்ளியை சூறையாடினர். இதில் பள்ளி பேருந்துகள் உடைக்கபட்டு அவற்றிற்கு தீ வைக்கப்பட்டது. பள்ளியில் பயின்ற மாணவர்களின் சான்றிதழ்களும் தீவைத்து வைக்கப்பட்டது.

கலவரத்தில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக டிஜிபி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து, இந்த கலவரம் தொடர்பாக காவல்துறையினர் 300-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் விசாரித்து வருகிறது. கலவர வழக்கில் 300-க்கும் மேற்பட்டர் கைது செய்யப்பட்ட நிலையில் 50 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 72 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 174 பேரின் ஜாமீன் மனுக்கள் மீது இன்று விசாரணை நடைபெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து