முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீரமங்கை வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் நாட்டிய நாடகம் சென்னையில் இன்று முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்

வியாழக்கிழமை, 11 ஆகஸ்ட் 2022      தமிழகம்
Stalin 2020 07-18

Source: provided

சென்னை: வீரமங்கை வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையில் இசையார்ந்த நாட்டிய நாடகத்தை சென்னை, கலைவாணர் அரங்கில் இன்று மாலை 6.00 மணியளவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். 

இராமநாதபுரத்தை ஆண்ட மன்னர் செல்லமுத்து சேதுபதி, முத்தாத்தாள் தம்பதியருக்கு 1730-ம் ஆண்டு வீரமங்கை வேலுநாச்சியார் மகளாகப் பிறந்தார். சிறு வயதிலேயே அனைத்துப் போர்ப் பயிற்சிகளையும் கற்றுத் தேர்ந்தார். வீரம் என்ற மூன்றெழுத்தை தன் மூச்சாகக் கொண்டு, பயம் என்கிற சொல்லை அறியாதவராகத் திகழ்ந்தார். 1772-ம் ஆண்டு ஆங்கிலேயப் படையெடுப்பால் கணவரை இழந்த இவருக்கு நாட்டை மீட்டெடுக்க வேண்டிய பெரும் பொறுப்பு இருந்தது. 

மருது சகோதரர்கள் ஆதரவுடனும், ஹைதர் அலி, கோபால் நாயக்கர் ஆகியோரின் உதவியுடன் சிவகங்கை மக்களை ஒன்று திரட்டி, வலுவான ஓர் எதிர்ப்புப் படையினை உருவாக்கி, ஏழு ஆண்டுகள் இடைவிடாமல் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்டு மாபெரும் வெற்றிப் பெற்று சிவகங்கை சீமையை மீட்டெடுத்தார். இதனைத் தொடர்ந்து 1789-ம் ஆண்டு வரை சிவகங்கையை ஆட்சி செய்தார். 

வடஇந்திய ஜான்சி ராணிக்கு 75 ஆண்டுகளுக்கு முன்பே விடுதலைப் போராட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய முதல் வீரப் பெண்மணி வேலுநாச்சியார் ஆவார்.  வீரமங்கை வேலுநாச்சியார் தமது போர்ப்படைப் பிரிவில் பெண்களுக்கென்று தனிப்படை உருவாக்கி பல போர்களை எதிர்கொண்டார். வேலுநாச்சியார் போர்ப்படை தளபதி ‘குயிலி’ ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தில் தன் இன்னுயிரையே  ஆயுதமாக ஏந்தினார். 

இந்திய விடுதலை வரலாற்றில் வீரம் நிறைந்த வீரமங்கை வேலுநாச்சியாருக்கு ஈடாக எவரும் இல்லை. சிவகங்கை சீமையை ஆண்ட வீரமங்கை வேலுநாச்சியார் 25.12.1896 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். வீரத்திருமகளைப் போற்றுகின்ற வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் சிவகங்கை மாவட்டம், சூரக்குளத்தில் வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

வீரமங்கை வேலுநாச்சியார் என்ற ‘வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் நாட்டிய நாடகத்தை கலைப்பண்பாட்டுத் துறை மூலம் ஓ.வி.எம்.தியேட்டர்ஸ் நிறுவனம் இணைந்து 62 நாடக கலைஞர்கள் பங்கேற்கும் இசையார்ந்த நாட்டிய நாடக நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தொடங்கி வைத்து பார்வையிடுகிறார். 

இதனைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் 15.08.2022  அன்று சி.என்.சி.கல்லூரியிலும், மதுரை மாவட்டத்தில் 21.08.2022 அன்று இராஜா முத்தையா மன்றம் அரங்கிலும், திருச்சி மாவட்டத்தில் 22.08.2022 அன்று கலையரங்கத்திலும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 28.08.2022 அன்று இந்துஸ்தான் கல்லூரி அரங்கத்திலும் வீரமங்கை வேலுநாச்சியார் இசையார்ந்த நாட்டிய நாடக நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க வீரமங்கை வேலுநாச்சியார் இசையார்ந்த நாட்டிய நாடகத்தை அனைவரும் கண்டுகளிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறது. இதற்கான அனுமதி இலவசம்.

தமிழக அரசின் சார்பில் நடைபெறும் வீரமங்கை வேலுநாச்சியாரின் இசையார்ந்த நாட்டிய நாடக நிகழ்ச்சிகளில் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து