எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மருந்து கடை சப்ளையராக வேலை செய்யும் ஜி.வி.பிரகாஷ் செய்யாத குற்றத்திற்காக தன் கடை உரிமையாளருக்கு ரூ.50 லட்சம் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார். தொழிலதிபர் ஸ்ரீகாந்தின் மனைவி பிந்து மாதவியை மிரட்டி பணம் பறிக்க முயற்சிக்கிறார் வில்லன் லிங்கா. இந்நிலையில், ஜி.வி.பிரகாஷின் பண தேவையை அறிந்துக் கொண்டு அவர் மூலம், தொழிலதிபர் ஸ்ரீகாந்தின் குழந்தையை கடத்த லிங்கா திட்டம் போடுகிறார். ஜி.வி.பிரகாஷ் குழந்தையை கடத்தினாரா? அவரது பணத்தேவை சந்திக்கப்பட்டதா? கடத்தலின் பின்னணியில் இருப்பவர்கள் யார் இதற்கான விடைதான் பிளாக்மெயில் படத்தின் கதை. ஜி.வி.பிரகாஷ் வழக்கம் போல கதாபாத்திரத்தை உணர்ந்து எதார்த்தமாக நடித்திருக்கிறார். நாயகி தேஜு அஸ்வினியின் நடிப்பும் பாராட்டுக்குறியது. ஸ்ரீகாந்த், பிந்து மாதவி, லிங்கா, சாஜி, ரெடின் கிங்ஸ்லி, முத்துகுமார், ரமேஷ் திலக் உள்ளிட்ட அனைவரும் சிறப்பான நடிப்பைக் கொடுத்துள்ளனர். சாம்.சி.எஸ் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ஓகே.ரகம். எழுதி இயக்கியிருக்கும் மு.மாறன், குழந்தை கடத்தல் பின்னணியில் இரண்டு வெவ்வேறு பிளாக்மெயில் சம்பவங்களுக்கு திரைக்கதை அமைத்த விதம் விறுவிறுப்பாக மட்டுமின்றி யூகிக்க முடியாதபடி சிறப்பாக உள்ளது. ஆரம்பம் முதல் முடிவு வரை படம் விறுவிறுப்பாக பயணிக்கும் அதே நேரத்தில் குழந்தை கடத்தலையே திரும்ப திரும்ப காட்டுவது போல் இருப்பதைத் தவிர்த்து இருந்தால் படம் பெரிய வெற்றி பெற்றிருக்கும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


