Idhayam Matrimony

தேசப்பற்றை பிரதிபலிக்கும் வகையில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நாடு முழுவதும் தேசிய கொடி ஏற்றி மக்கள் கோலாகலம்

சனிக்கிழமை, 13 ஆகஸ்ட் 2022      தமிழகம்
National-flag 2022-08-13

Source: provided

சென்னை : இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாட மத்திய அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக வீடுகள் மற்றும் அலுவலகங்களில் தேசிய கொடியை நேற்று (சனிக்கிழமை) முதல் 3 நாட்களுக்கு பொதுமக்கள் ஏற்றலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. இதனால் நாடு முழுவதும் தேசிய கொடி விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. தேசிய கொடியை நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்கள் மூலமாகவும் விற்பனை செய்தனர். அந்த வகையில் மட்டும் சுமார் 2 கோடி தேசிய கொடி விற்பனை ஆகியுள்ளது. மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலமாகவும் தேசிய கொடி தயாரித்து வழங்கப்பட்டது. ரூ.25 முதல், ரூ.5 ஆயிரம் வரை தேசிய கொடிகளுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. 

நேற்று காலை நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் தங்களது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் தேசிய கொடியை ஏற்றினார்கள். தேசிய கொடியை பயன்படுத்தும் போது எதையெல்லாம் செய்யக்கூடாது. எதையெல்லாம் செய்யலாம் என்று வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு இருந்தது. அதை கடைபிடித்து பொதுமக்கள் தேசிய கொடியை ஏற்றினார்கள். பல்வேறு மாநிலங்களிலும், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் நடிகர்கள் தங்களது வீடுகளில் தேசிய கொடி ஏற்றினார்கள். 

மும்பையில் இந்தி நடிகர்கள் போட்டி போட்டு தேசிய கொடியை தங்களது வீடுகளில் பறக்க விட்டனர். அவர்கள் அனைவரும் அதை செல்பி எடுத்தும் சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். இதன் காரணமாக சாதாரண பொதுமக்களிடமும் தங்களது வீடுகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. இதனால் நேற்று கடைகளில் சிறிய ரக தேசிய கொடி விற்பனை அதிக அளவில் விறுவிறுப்புடன் நடைபெற்றது. தேசிய கொடிகள் ஏற்றப்பட்டதால் பல நகரங்களில் எங்கு பார்த்தாலும் மூவர்ண மயமாக காணப்பட்டது. 

சென்னையில் அரசு கட்டிடங்கள் மற்றும் நினைவிடங்களில் மூவர்ண அலங்கார விளக்கு செய்யப்பட்டுள்ளது. இதனால் இரவு நேரங்களில் மூவர்ணமாக கட்டிடங்கள் ஜொலித்தன. நாளை 15-ம் தேதி வரை மூவர்ண கோலாகலத்தை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன. இதனால் நாடு முழுவதும் நாட்டின் 75-வது சுதந்திர தினம் மக்கள் மத்தியில் தேசப்பற்றை பிரதிபலிக்கும் வகையில் மாறி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து