முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேதகு-2 விமர்சனம்

திங்கட்கிழமை, 15 ஆகஸ்ட் 2022      சினிமா
Medhagu-2-review 2022-08-15

Source: provided

மேதகு திரைக்களம் தயாரிப்பில் இரா. கோ. யோகேந்திரனின் ஆக்கம் மற்றும் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் மேதகு 2.  பிரபாகரனின் ஆரம்ப கால வரலாற்றைப் பதிவு செய்யும் விதமாக வந்த மேதகு பாகம் ஒன்றை கிட்டு இயக்கி இருந்தார். கடந்த ஆண்டு ஜூன் 25 அன்று பாகம் ஒன்று வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது .இதன் தொடர்ச்சியாக இப்போது மேதகு 2 வெளியாக இருக்கிறது. இதில்  விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வளர்ச்சியும் தமிழக தலைவர்களின் உதவியும் இந்திரா காந்தியிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. பாவலரேறு பெருஞ்சித்திரனார் , பழ . நெடுமாறன் , புதுக்கோட்டை பாவண்ணன்,  வைகோ ஆகியோர் புலிகள் இயக்கத்துக்கு அளித்த ஆதரவும் எம் ஜி ஆர் கோடிகளை அள்ளிக் கொடுத்த விதமும் சொல்லப்படுகிறது. மூன்றாம் பாகம் வரும் என்ற அறிவிப்போடு இந்த மேதகு 2 படம் முடிகிறது. பிரபாகரனாக  கவுரி சங்கர் தனது அருமையாக நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார், வினோத் ராஜேந்திரன் ஒளிப்பதிவில், பிரவீன் குமார் இசையில், ஆதித்யா முத்தமிழ் மாறன் படத் தொகுப்பில் இப்படம் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் தனது பங்களிப்பைக் கொடுத்திருக்கும் நாசர் பாராட்டப்பட வேண்டியவர்.  மேதகு 2 பார்க்க வேண்டிய படம். ஆகஸ்ட்-19ஆம் தேதி இந்த படம் வெளிநாட்டு திரையரங்குகளிலும் tamils OTT என்கிற புதிய ஓடிடி தளத்திலும் இப்படம் வெளியாகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து