முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் 7 கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வசதி: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

வெள்ளிக்கிழமை, 19 ஆகஸ்ட் 2022      இந்தியா
Modi 2022 07 29

ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் ஏழு கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கோவா மாநிலத்தின் கிராமப்புற வீடுகளில் 100 சதவீத குழாய் நீர் விநியோகத்தை குறிக்கும் வகையில் கோவா அரசு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் வீடியோ இணைப்பு மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார். பனாஜியில் நடைபெற்ற விழாவில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது., சுதந்திரத்திற்குப் பிறகு ஏழு தசாப்தங்களில், மூன்று கோடி கிராமப்புற வீடுகளுக்கு மட்டுமே குழாய் நீர் இணைப்பு இருந்தது. ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளில், இந்த திட்டம் அறிவிக்கப்பட்டதிலிருந்து, பாஜக அரசு கூடுதலாக ஏழு கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு குழாய் நீர் இணைப்பு வழங்கியுள்ளது.

10 கோடி மைல்கல்லை எட்டியது நீர் வழங்கல் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் மத்திய அரசின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. ஜல் ஜீவன் திட்டத்தை அறிவித்தபோது, ​​16 கோடி கிராமப்புற குடும்பங்கள் மற்ற நீர் ஆதாரங்களை நம்பியிருந்தனர். இவ்வளவு பெரிய மக்கள் தொகை போராடுவதை எங்களால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. 

ஜல் ஜீவன் திட்டத்தின் வெற்றிக்கு மக்களின் பங்களிப்பு, பங்குதாரர்களின் கூட்டு, அரசியல் விருப்பம் மற்றும் வளங்களை சிறந்த முறையில் பயன்படுத்துதல் ஆகியவையே காரணம். நாடு மற்றும் குறிப்பாக கோவா ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது. நாட்டின் முதல் 'ஹர் கர் ஜல்' (ஒவ்வொரு வீட்டிற்கும் தண்ணீர்) சான்றிதழ் பெற்ற மாநிலமாக கோவா மாறியுள்ளது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து