முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய துறைமுகங்கள் வரைவு மசோதா சட்டப் பிரிவுகளை அகற்ற வேண்டும் : பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

வியாழக்கிழமை, 22 செப்டம்பர் 2022      தமிழகம்
Stelin 2022 02 23

மத்திய அரசின் வரைவு இந்திய துறைமுகங்கள் மசோதா கடலோர மாநிலங்களின் உரிமைகளை பாதிக்கிறது. ஆகவே இந்த வரைவுச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள பிரிவுகளை அகற்றிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மேலும் சிறு துறைமுகங்களின் எதிர்கால வளர்ச்சியை தடுக்கும் வகையில் உள்ளதாகவும் தனது கடிதத்தில் முதல்வர்  மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நேற்று அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, 

ஒன்றிய அரசின் வரைவு இந்திய துறைமுகங்கள் மசோதா 2022, கடலோர  மாநிலங்களின் உரிமைகளைப் பாதிக்கிறது. சிறு துறைமுகங்களின் எதிர்கால வளர்ச்சியைத் தடுப்பதாகவும் அமைகிறது. மேலும் மாநில அரசுகளின் உரிமைகளை பாதிக்கக் கூடிய வகையில் உள்ளது. ஆகவே இந்த வரைவுச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள பிரிவுகளை அகற்றிட வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள அந்த கடிதத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து