முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெப்டியூனை படம் பிடித்த ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி புகைப்படத்தை வெளியிட்டது நாசா

வெள்ளிக்கிழமை, 23 செப்டம்பர் 2022      உலகம்
NASA 2022--09-23

Source: provided

வாஷிங்டன் :  ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியால் எடுக்கப்பட்ட நெப்டியூன் கோளின் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. 

சூரிய குடும்பத்தின் 8-வது கிரகம் நெப்டியூன் ஆகும். சூரியனில் இருந்து 30 மடங்கு தொலைவில் நெப்டியூன் அமைந்துள்ளது. இந்த நெப்டியூனையும், அதன் மெல்லிய வளையங்களின் விரிவான படத்தையும் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி முதல் முறையாக படம் பிடித்துள்ளது. இந்தப் படத்தை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், நாசா வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. 

ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலை நோக்கி, ஒளிர்கிற நெப்டியூன் மற்றும் அதன் நுட்பமான, தூசுகள் நிறைந்த வளையங்களை படம் பிடித்துள்ளது என நாசா தெரிவித்துள்ளது. இதுபற்றி நெப்டியூன் சிஸ்டம் நிபுணரும், வெப் இடைநிலை விஞ்ஞானியுமான ஹெய்டி ஹேமல் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

இந்த மங்கலான தூசுகள் நிறைந்த வளையங்களை நாங்கள் கடைசியாகப் பார்த்து 30 ஆண்டுகள் ஆகி விட்டன. அகச்சிவப்பு நிறத்தில் அவற்றைப் பார்ப்பது இதுவே முதல் முறை ஆகும் என தெரிவித்துள்ளார்.

1989-ம் ஆண்டு வாயேஜர்- 2 விண்கலம் நெப்டியூன் கிரகத்தை கடந்து சென்றதில் இருந்து, விரிவாகக் காணப்படாத அம்சங்களை இந்த தொலைநோக்கியின் அகச்சிவப்பு கருவிகள் விரிவாக எடுத்துக்காட்டி இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். நெப்டியூனின் 14 நிலவுகளில் 7 நிலவுகளையும், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி படம் பிடித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து