முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேரறிவாளனை போல தங்களையும் விடுவிக்கக்கோரி நளினி, ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனு மீது நாளை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை

சனிக்கிழமை, 24 செப்டம்பர் 2022      இந்தியா
Supreme-Court 2021 07 19

Source: provided

புதுடெல்லி : ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனைப் போல தங்களையும் விடுதலை செய்ய கோரி நளினி, ரவிச்சந்திரன் ஆகியவர்கள் தாக்கல் செய்த மனு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணைக்கு வருகிறது. 

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி ஆகியவர்களுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுளாக குறைக்கப்பட்டது. 7 பேர் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த நிலையில் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பது பல்வேறு தரப்பினரின் கோரிக்கை. 31 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த பேரறிவாளன் கடந்த 2016-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், கடந்த மார்ச் மாதம் ஜாமீன் வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து மே 18-ம் தேதி சிறப்பு தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசனத்தின் 142-வது பிரிவின் கீழ் தமக்கான சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளனை விடுவித்தது. இத்தீர்ப்பின், அடிப்படையில் தங்களையும் விடுதலை செய்ய கோரி நளினி, ரவிச்சந்திரன் ஆகியவர்கள் தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

இதனால், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தவர்கள் பேரறிவாளனை விடுதலை செய்த தீர்ப்பின் அம்சங்களை சுட்டிக்காட்டினர். மேலும், இடைக்காலமாக பேரறிவாளனை போல தங்களுக்கும் ஜாமீன் வழங்க கோரியிருந்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை நாளை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருவதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து