முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆதார் விமர்சனம்

சனிக்கிழமை, 24 செப்டம்பர் 2022      சினிமா
Aadhaar-Review 2022-09-24

Source: provided

கருணாஸ் நாயகனாக நடித்துள்ள படம் ஆதார். அருண் பாண்டியன், ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படத்தை ராம்நாத் பழனிகுமார் இயக்கியுள்ளார்.இசை ஸ்ரீகாந்த் தேவா, கதை, கட்டிடத் தொழிலாளியான கருணாசின் மனைவி ரித்விகா பிறந்த குழந்தையை தவிக்க விட்டு விட்டு காணாமல் போகிறார். இது பற்றி காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் கருணாஸிற்கு ஒரு அதிர்ச்சியான தகவல் கிடைக்கிறது. இந்நிலையில் இவர்களுக்கு துணையாக இருந்த இனியாவும் திடீரென காணாமல் போகிறார். பிறகு அவரின் சடலம் கிடைக்கிறது. இறுதியில் கருணாஸின் மனைவி என்ன ஆனார்? இனியாவின் மரணத்திற்கு யார் காரணம் என்பது தான் படத்தின் கிளைமாக்ஸ். கார்ப்ரேட்களின் சூழ்ச்சியில், எளிய மனிதர்களின் உயிர்கள் எப்போதும் தூசுதான் என்பதையும், பணத்துக்கும் அதிகாரத்துக்கும் இடையில் சாதாரண மனிதனின் நீதி எப்படி தள்ளாடுகிறது என்பதையும் யதார்த்தமாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார். கட்டிடத் தொழிலாளியாக வரும் கருணாஸ் நடிப்பில் அசத்தியுள்ளார். கர்ப்பிணியான ரித்விகாவுக்கு அதிக வேலை இல்லை என்றாலும் அவரைச் சுற்றிதான் கதை நகர்கிறது. இரண்டு மணி நேரப் படம் யாரும் எதிர் பாராத கிளைமாக்ஸ்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து