முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அணு ஆயுதங்கள் மூலம் உக்ரைனுக்கு ரஷ்யா பதிலடி கொடுக்க வேண்டும் செச்சினியா குடியரசு தலைவர் சொல்கிறார்

ஞாயிற்றுக்கிழமை, 2 அக்டோபர் 2022      உலகம்
Ramzan-Kadyrov 2022-10-02

Source: provided

மாஸ்கோ ; ரஷ்யா குறைந்த சக்தி வாய்ந்த அணு ஆயுதத்தைப் பயன்படுத்தி உக்ரைனுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று செச்சினியா குடியரசின் தலைவர் ரம்ஜான் கதிரோவ் தெரிவித்துள்ளார். 

உக்ரைனின் டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் வடக்கில் உள்ள லைமன் பகுதியிலிருந்து ரஷ்ய படைகள் வெளியேற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், ரஷ்யாவுக்கு மிக நெருங்கிய நபரான ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள தன்னாட்சி பெற்ற பிராந்தியமான செச்சினியா குடியரசின் தலைவர் ரம்ஜான் கதிரோவ், 

ரஷ்யா குறைந்த சக்தி வாய்ந்த அணு ஆயுதத்தைப் பயன்படுத்தி பதிலடி கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து உக்ரைன் இராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியிருப்பதாவது, 

லைமனைக் கைப்பற்றினால், லுஹான்ஸ்க் பகுதிக்குள் உக்ரைன் படைகள் முன்னேற முடியும். லைமன் முக்கியமானது, ஏனெனில் இது உக்ரேனின் டான்பாஸ் பகுதியின் விடுதலையை நோக்கிய அடுத்த படியாகும். இதன்மூலம், கிரெமின்னா மற்றும் சீவிரோடோனெட்ஸ் பகுதிகளுக்கு செல்ல இது ஒரு அருமையான வாய்ப்பு. இது மனரீதியாக மிக முக்கியமானது என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து