Idhayam Matrimony

செக் குடியரசு தொழில் முதலீட்டாளர்களுக்கு தமிழகத்தில் முதலீடு செய்ய அமைச்சர் அன்பரசன் அழைப்பு

புதன்கிழமை, 5 அக்டோபர் 2022      தமிழகம்
Anparasan 2022--10-05

Source: provided

சென்னை : செக் குடியரசு நாட்டில் உள்ள தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து  தமிழகத்தில் முதலீடு செய்ய அமைச்சர் தா.மோ. அன்பரசன் அழைப்பு விடுத்தார். 

குறு , சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையில் பல்வேறு புதிய சிறப்பு திட்டங்களை அரசு செயல்படுத்தி வரும் நிலையில் அந்நிய முதலீடுகளை  ஈர்க்கும் விதமாக அமைச்சர் தா.மோ.அன்பரசன்  அரசு  முறை பயணமாக செக் குடியரசு நாட்டில் நடைபெறும் MSV கண்காட்சியில் பங்கு கொள்ள கடந்த 3-ம் தேதி  செக் குடியரசு நாட்டிற்கு சென்றார்.          

அங்கு அவரை செக் குடியரசு நாட்டின் தொழில் மற்றும் வணிக துறை அரசு செயலர் மற்றும் உயர் அலுவலர்கள் வரவேற்று தொழில் முதலீடுகள் குறித்தும், சுற்றுப் பயண விவரங்கள் குறித்தும் எடுத்துரைத்தனர். அதனை தொடர்ந்து அமைச்சர் மற்றும் MSME குழுவினரும் EVEKTOR விமானம் தயாரிக்கும்  தொழிற் சாலையினையும், கண்ணாடி தயாரிக்கும் தொழிற்சாலையினையும்  பார்வையிட்டனர். இந்த ஆய்வின் போது அமைச்சர், அந்நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார். இந்த ஆய்விற்கு பிறகு MSV கண்காட்சி அரங்கிற்கு சென்று அரங்கினை பார்வையிட்டனர்.    

இந்நிகழ்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் அருண் ராய், நிதித்துறை அரசு துணை செயலாளர்  சி.பிஆதித்யா செந்தில்குமார், தொழில் வணிக கூடுதல் ஆணையர் கிரேஸ் பச்சாவ் மற்றும் தமிழக MSME தொழில் துறை குழுவினர்,  செக் குடியரசு உயர் அலுவலர்கள், செக் குடியரசின் தொழில் முதலீட்டாளர்கள்  கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து