முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொழில் முதலீட்டிற்கு உகந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேச்சு

வியாழக்கிழமை, 6 அக்டோபர் 2022      உலகம்
Anbarasan 2022-10-06

Source: provided

சென்னை: தொழில் முதலீட்டிற்கு உகந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று செக் குடியரசு நாட்டில் நடைபெற்ற மாநாட்டில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசினார். 

தமிழக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அரசு முறை பயணமாக செக் குடியரசு நாட்டில் நடைபெறும்  MSV  கண்காட்சியில் பங்கேற்றுள்ளார்.  அங்கு நடைபெற்ற  MSV கண்காட்சியின் துவக்க விழாவில் தொழில் முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் முன்னிலையில்  அமைச்சர் தா.மோ. அன்பரசன் சிறப்புரையாற்றி பேசியதாவது, 

இந்தியாவிற்கும் செக் குடியரசிற்கும் இடையிலான பொருளாதார உறவு என்பது  100 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது. மேலும் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில்  வலிமையையும் வளர்ச்சியையும் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலேயே 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.  இந்தியாவில் 2.5 மில்லியனுக்கும் திறமையான தொழிலாளர்கள் உள்ளனர்.  தமிழ்நாடு  இந்தியாவிலேயே ஏற்றுமதி மற்றும் வணிகம் செய்வதில் 3-வது இடத்தில் உள்ளது.

தமிழ்நாடு 6 விமான நிலையங்கள், 4 பெரிய துறைமுகங்கள், நன்கு இணைக்கப்பட்ட சாலைகள் மற்றும் ரயில் பாதைகள் என ஒருங்கிணைக்கப்பட்ட போக்குவரத்து வசதிகள் கொண்ட மாநிலமாக திகழ்கிறது.  தமிழகத்தில் வாகன உற்பத்தி , ஜவுளி, தோல், விமானம் தயாரிப்பு , பாதுகாப்பு ,  மருந்து போன்ற துறைகளில் 5 மில்லியனுக்கும் அதிகமான MSME  நிறுவனங்கள் உள்ளன.   உணவு பதப்படுத்தும் தொழிலில் தமிழகத்தில் உள்ள   MSME   நிறுவனங்கள் உலகளாவிய வர்த்தக தொடர்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.

செக் குடியரசு மற்றும் தமிழ்நாடு பல பொதுவான தொழில்கள் உள்ள நிலையில் குறிப்பாக வாகன உற்பத்தி  தொழில், கனரக தொழில், பாதுகாப்பு மற்றும் விமானம் தயாரிப்பு துறையில் பல வணிக வாய்ப்புகள் உள்ளன.   Hyundai, BMW, Renault மற்றும் Nissan  போன்ற முக்கிய  வாகன தொழிற்சாலைகள் இங்கு அமைந்துள்ளததால் தமிழ்நாடு இந்தியாவின் வாகன உற்பத்தியில் மையமாக திகழ்கின்றது.  இதுபோன்ற பெரும் வாகன உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு தமிழகத்தில் உள்ள  MSME  நிறுவனங்கள்    உதிரி பாகங்கள்  வழங்குகின்றன.  இதனால்  தமிழகத்தின்  தலைநகரமான  சென்னை, ஒரு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மையமாக திகழ்கிறது. 

 இந்தியாவின் கனரக மின் உபகரணங்கள்  உற்பத்தியில் தமிழகத்தின் பங்களிப்பு 8 சதவீதம் ஆகும்.  விமான உற்பத்தி  மற்றும் பாதுகாப்பு தளவாட உற்பத்தி துறைக்கு 21.9 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.   மேலும் இத்துறையின் வளர்ச்சிக்காக தமிழ்நாட்டில் பாதுகாப்பு தளவாட தொழில் பெரும் வழிதடம் 2019-ல் தொடங்கப்பட்டது .  இந்தத் துறைகளைத் தவிர்த்து, ஜவுளி, தோல், மின்னனு பொருட்கள் உற்பத்தியிலும் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.. தமிழ்நாடு தொழில் முதலீட்டிற்கு உகந்த மாநிலமாக திகழ்வதால் செக் குடியரசு நாட்டில் உள்ள தொழில் முனைவோர்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு அழைக்கின்றேன்.  இவ்வாறு அவர் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து