முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போலீசாருக்கு சின்னம்மை பாதிப்பு: சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை

வெள்ளிக்கிழமை, 25 நவம்பர் 2022      ஆன்மிகம்
Sabarimala 2022 09 09

Source: provided

திருவனந்தபுரம் : சபரிமலையில் 5 போலீசாருக்கு சின்னம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் பக்தர்களுக்கு கேரள சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நடந்து வருகிறது. இதற்காக கடந்த 16-ந் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. 17-ந் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

இம்முறை கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் கோவிலுக்கு வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு இருமுடி கட்டி வருகிறார்கள். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கேரள தேவசம் போர்டு செய்துவருகிறது.

இந்த நிலையில், சபரிமலையில் பாதுகாப்பு பணியில் இருந்த 5 போலீசாருக்கு சின்னம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் சபரிமலை வரும் பக்தர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசார் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என கேரள சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து