முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் எல்லையிலிருந்து இந்திய எல்லைக்குள் நுழைந்த டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது

செவ்வாய்க்கிழமை, 29 நவம்பர் 2022      இந்தியா
drone 2022 11 22

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள பாகிஸ்தான் எல்லையிலிருந்து இந்தியப் பகுதிக்குள் நுழைந்த ஆளில்ல விமானத்தை மகளிர் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர். 

திங்கள்கிழமை இரவு 11,05 மணியளவில் அமிர்தசரஸ் நகருக்கு வடக்கே 40 கி.மீ தொலைவில் உள்ள சாஹர்பூர் கிராமத்திற்கு அருகே இந்திய எல்லையில் பாதுகாப்புப் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பாகிஸ்தான் பகுதியிலிருந்து வந்த ஆளில்லா விமானம் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற போது, பாதுகாப்புப் படையினர் அதை நோக்கிச் சுட்டு வீழ்த்தினர். 

தேடுதல் நடவடிக்கையில், ஆறு இறக்கைகள் கொண்ட சேதமடைந்த ஆளில்லா விமானம் ஒன்றைப் பாதுகாப்புப் படையினர் மீட்டனர்.  18 கிலோ எடை கொண்ட இந்த ஆளில்லா விமானத்தில் 3.11 கிலோ போதைப்பொருள் இருந்ததாகவும், அதன் அடியில் இணைக்கப்பட்டிருந்த வெள்ளை பாலிதீனில் சுற்றப்பட்டதாகவும் பிஎஸ்எஃப் தெரிவித்துள்ளது.

மகளிர் பாதுகாப்புப் படை வீரர்கள் மீண்டும் ஒரு விமானத்தைக் கைப்பற்றிக் கடத்தல் முயற்சியை முறியடித்துள்ளது. முன்னதாக நவம்பர் 25 அன்று அமிர்தசரஸில் உள்ள சர்வதேச எல்லைக்கு அருகே பாகிஸ்தான் ஆளில்லா விமானத்தைப் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து