முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கானிஸ்தானில் மசூதிக்குள் நுழைந்து முன்னாள் பிரதமரை கொல்ல முயற்சி

சனிக்கிழமை, 3 டிசம்பர் 2022      உலகம்
Hekmatyar 2022 12 03

ஆப்கானிஸ்தான் முன்னாள் பிரதமர் ஹெக்மத்யாரை கொல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

ஆப்கானிஸ்தானின் ஹெஸ்ப்-இ-இஸ்லாமி கட்சியின் தலைவராக ஹெக்மத்யார் உள்ளார். ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அந்நாட்டை விட்டு வெளியேறி விட்டாலும், முன்னாள் பிரதமர் குல்புதீன் ஹெக்மத்யார் ஆப்கானிஸ்தானில் தான் உள்ளார். 

இந்நிலையில், ஹெக்மத்யாரும் அவரது ஆதரவாளர்களும் கூடியிருந்த மசூதிக்குள், சந்தேகிப்படும் வகையில் பயங்கரவாதிகள் சிலர், பர்தா அணிந்தபடி நுழைந்து ஹெக்மத்யாரை குறிவைத்து நடத்திய தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். இருவர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து