முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

6-ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம்: தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஒரு லட்சம் போலீசார்

சனிக்கிழமை, 3 டிசம்பர் 2022      தமிழகம்
Silenthra-Babu 2022 01 02

பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6-ம் தேதி அன்று நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். அதன்படி தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஒரு லட்சம் போலீசார் ஈடுபடுத்தப்படவுள்ளனர். 

கோவையில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து அங்கு தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்த பரபரப்பு அடங்கும் முன்னரே கர்நாடக மாநிலம் மங்களூருவில் நடந்த குக்கர் குண்டு வெடிப்பு சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் மேலும் அசம்பாவித சம்பவங்கள் அரங்கேறி விடக்கூடாது என்பதற்காக தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். 

மாநிலம் முழுவதும் உள்ள ஒரு லட்சத்து 20 ஆயிரம் போலீசாரும் டிசம்பர் 6-ம் தேதி அன்று பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்கான அறிவுறுத்தல்கள் டி.ஜி.பி. அலுவலகத்தில் இருந்து முறைப்படி தெரிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கோவை, திருவண்ணாமலையில் கூடுதல் கண்காணிப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கோவையில் 4 ஆயிரம் போலீசாரும், திருவண்ணாமலையில் ஆயிரக்கணக்கான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 

கோவை சிங்காநல்லூர் பஸ் நிலையம், உக்கடம் பஸ் நிலையங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாநகரில் உள்ள கோனியம்மன், தண்டுமாரியம்மன் கோவில் உள்பட அனைத்து கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் முன்பும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். கோவை ரயில் நிலையத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவை விமான நிலையத்திலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 

மேலும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர முக்கிய இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.  இதே போன்று மதுரை, நெல்லை, நாகர்கோவில் ஆகிய மாவட்டங்களிலும் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தேவையான அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 

தலைநகரான சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். திருவல்லிக்கேணி, பெரியமேடு உள்ளிட்ட குறிப்பிட்ட பகுதிகளில்  6-ம் தேதி அன்று ரோந்து பணியை தீவிரப்படுத்த கமிஷனர் சங்கர் ஜிவால் அறிவுறுத்தி உள்ளார். இது தொடர்பாக துணை கமிஷனர்களுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. வாகன சோதனையை தீவிரப்படுத்தவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள் உள்பட மக்கள் கூடும் வழிபாட்டு தலங்கள் அனைத்திலும் போலீசார் இப்போதே தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். சென்னை விமான நிலையம், சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து