முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்து அறநிலையத்துறை சார்பில் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் யானைக்கு ரூ. 10 லட்சத்தில் நீச்சல் குளம்

திங்கட்கிழமை, 5 டிசம்பர் 2022      ஆன்மிகம்
Elephant 2022 12 05

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் யானை பாப்கட் செங்கமலத்திற்கு இந்து அறநிலையத்துறை சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பில் நீச்சல் குளம் கட்டப்பட்டுள்ளது. 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள ராஜகோபால சுவாமி கோவிலில் செங்கமலம் யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. 34 வயதாகும் இந்த யானையின் சிகை அலங்காரத்தின் காரணமாக பாப்கட் செங்கமலம் என்று பக்தர்கள் அழைக்கின்றனர். இந்த யானை குளிப்பதற்காக ஏற்கனவே ரூ.75,000 செலவில் ஷவ்வர் வசதி அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த யானைக்கு கோவில் வளாகத்திலேயே நீச்சல் குளம் கட்டித்தர வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா கோரிக்கை வைத்திருந்தார். அதனை ஏற்று ரூ.10 லட்சம் மதிப்பில் இந்து அறநிலையத்துறை நீச்சல் குளத்தை கட்டி கொடுத்துள்ளது. இதனை சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா திறந்து வைத்தார். கோயில் வளாகத்தில் ஈசானி மூலையில் சுமார் ஆறரை அடி ஆழம், 500 சதுரடி பரப்பளவில் இந்த குளம் கட்டப்பட்டுள்ளது. நீச்சல் குளத்தில் செங்கமலம் யானை குளித்து மகிழ்ந்த காட்சியை கோயிலுக்கு வந்த பக்தர்கள் பார்த்து ரசித்தனர்.    

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து