முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விளையாட்டு போட்டியில் ஹிஜாப் இல்லாமல் பங்கேற்ற வீராங்கனையின் வீடு தகர்ப்பு

செவ்வாய்க்கிழமை, 6 டிசம்பர் 2022      உலகம்      விளையாட்டு
Iran 2021 12-06

தென் கொரியாவில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் ஹிஜாப் அணியாமல் பங்கேற்ற ஈரான் வீராங்கனையின் வீடு தகர்க்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. 

ஈரான் நாட்டில் பெண்களுக்கான ஆடைக் கட்டுப்பாடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உலகளவில் ஈரானிய பெண்கள் எங்கு சென்றாலும் அவர்கள் நாட்டின் கட்டாய ஆடைக் கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றி ஆடை அணிய வேண்டும். ஈரானிய விளையாட்டு வீராங்கனைகள் தங்கள் தலைமுடியை மறைத்தவாறு, தலையில் முக்காடு அணிந்து தான் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். 

இந்த நிலையில், தென் கொரியாவில் சர்வதேச மலை ஏறும் போட்டி சமீபத்தில் நடந்தது. இப்போட்டியில் ஈரானிய மலையேற்ற வீராங்கனை எல்னாஸ் ரெகாபி(33), ஹிஜாப் இல்லாமல் பங்கேற்றார். சர்வதேச போட்டியில் ஈரானின் கட்டாய ஆடைக் கட்டுப்பாட்டை அவர் மீறினார் என்று கூறப்படுகிறது. 

எனது முக்காடு கவனமின்றி கீழே விழுந்து விட்டது" என்று அவர் விளக்கம் அளித்தார். இதனையடுத்து அவர் கட்டாயமாக மன்னிப்பு கேட்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். இந்நிலையில், ஹிஜாப் அணியாமல் போட்டியிட்ட ஈரானிய தடகள வீராங்கனையின் வீடு போலீஸ் அதிகாரிகளால் இடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. .

உரிய அனுமதி இல்லாததன் காரணமாக அவருடைய குடும்பவீடு இடிக்கப்பட்டது என்றும், இதற்கும் ஹிஜாப் சம்பவத்திற்கும் சம்பந்தமில்லை, இது பல மாதங்கள் முன்பு நடந்தது என்று உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன. இதனிடையே, வீராங்கனை எல்னாஸ் ரெகாபி மற்றும் அவரது சகோதரரும் சிறந்த தடகள வீரருமான தாவூத் ஆகியோர் கண்கலங்கி அழும் வீடியோ வைரலாகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து