முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொருளாதார நெருக்கடி: ரூ.44.47 கோடி இறக்குமதி பொருட்கள் பாகிஸ்தான் துறைமுகத்தில் தேக்கம்

வியாழக்கிழமை, 8 டிசம்பர் 2022      உலகம்
Pakistan-port 2022 12 08

பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி காரணமாக ரூ. 44.47 கோடி மதிப்பிலான இறக்குமதி பொருட்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளன. 

பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடியால் நிலைமை மோசமடைந்து உள்ளது. அந்நாட்டில், சீனா, எகிப்து, தாய்லாந்து மற்றும் பிற நாடுகளில் இருந்து உள்நாட்டுக்கு தேவையான உணவு பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. எனினும், கடந்த 3 நாட்களாக கராச்சி துறைமுகத்தில் வெளிநாட்டு இறக்குமதி பொருட்களான வெங்காயம், இஞ்சி மற்றும் பூண்டு உள்ளிட்ட பொருட்கள் தேங்கியுள்ளன. 

பாகிஸ்தானில் அந்நிய செலாவணி கையிருப்பு பற்றாக்குறையாக உள்ளது. இதனால், கராச்சி துறைமுகத்தின் பல்வேறு முனையங்களில் இறக்குமதி செய்யப்பட்ட காய்கறி உள்ளிட்டவை தேங்கி இருக்கின்றன. இவற்றின் மதிப்பு ரூ. 44.47 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. 

இறக்குமதி பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருவதில் ஏற்படும் காலதாமதம் அவற்றின் தினசரி விலை உயர்வுக்கு வழிவகுக்கும் என்பதுடன், துறைமுக முனைய கட்டணம், இறக்குமதி கட்டணம் மற்றும் கன்டெய்னர்களுக்கான விலை உள்ளிட்டவையும் அதிகரிக்க கூடும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து