முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அலுவலக இருக்கைகளை படுக்கை அறைகளாக மாற்றிய எலான் மஸ்க்

வெள்ளிக்கிழமை, 9 டிசம்பர் 2022      உலகம்
Elon-Musk 2022 12 -09

டுவிட்டர் நிறுவனத்தில் இருந்த சோபாக்கள், நவீன இருக்கைகள் போன்றவற்றை எலான் மஸ்க் படுக்கைகளாக மாற்றி உள்ளார். இது வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய தொழில் அதிபர் எலான் மஸ்க், அதில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக நிறுவன ஊழியர்கள் பலரும் அதிரடியாக நீக்கப்பட்டனர். இதை தொடர்ந்து டுவிட்டரில் புளு டிக்கிற்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. நிறுவனத்தில் அடுத்தடுத்து நடந்த மாற்றங்கள் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில் எலான் மஸ்க் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள டுவிட்டர் தலைமை அலுவலகத்தில் தற்போது பல புதிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளார். இதில் நிறுவனத்தில் இருந்த சோபாக்கள், நவீன இருக்கைகள் போன்றவற்றை அவர் படுக்கைகளாக மாற்றி உள்ளார். இரட்டை சோபாக்கள் ஒற்றை படுக்கையாக மாறி உள்ளது. அவையும் நவீன வடிவமைப்பில் அமைக்கப்பட்டு வருகிறது. 

இந்த மாற்றங்கள் மற்றும் இருக்கைகள் படுக்கையான படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கடும் பணி செய்யும் ஊழியர்கள் சிறிது நேரம் ஓய்வெடுக்க இந்த வசதிகள் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படங்கள் வைரலானதை தொடர்ந்து சான்பிரான்சிஸ்கோ நகர அதிகாரிகள் வணிக ரீதியாக பதிவு செய்யப்பட்ட கட்டிடத்தில் ஓய்வறைகள் கட்டியது ஏன்? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து