முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என்ஜாய் விமர்சனம்

திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2022      சினிமா
Enjoy-Review 2022-12-26

Source: provided

லட்சுமி நாராயணன் தயாரிப்பில் பெருமாள் காசி இயக்கத்தில் முழுக்க முழுக்க இளைஞர்களை  குறிவைத்து எடுக்கப்பட்டுள்ள படம் என்ஜாய். கதை, மதன்குமார், விக்னேஷ், ஹரீஷ்குமார் இவர்கள் மூவரும் ஒரே வீட்டில் வசிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் வேலை போரடிக்க உல்லாசம் தேடி கொடைக்கானல் பயணிக்கிறார்கள். இதற்கிடையே கல்லூரியில் படிக்கும் நிரஞ்சனா, ஜி.வி.அபர்ணா, சாய் தன்யா ஆகிய மூன்று தோழிகளும் ஆடம்பரமாக வாழ நினைத்து தவறான பாதையில் பயணிக்க முடிவு செய்து இவர்களும் கொடைக்கானல் செல்கிறார்கள். அங்கே அவர்கள் ஒரு பிரச்சனையில் சிக்கிக்கொள்ள, கொடைக்கானலுக்கு உல்லாசத்துக்கு வரும் இளைஞர்களிடம் உதவி கேட்கிறார்கள். இளைஞர்கள் பெண்களை காப்பாற்றினார்களா? என்ன நடந்தது என்பதை கிளுகிளுப்பாக சொல்வது தான் என்ஜாய். நிரஞ்சனா, ஜி.வி. அபர்ணா, சாய் தன்யா, ஹாசின் மற்றும் சாருமிசா மதன்குமார், நடன கலைஞர் விக்னேஷ், ஹரீஷ்குமார் ஆகியோர் தங்களது முதல் படம் போல் இல்லாமல் நேர்த்தியாக நடித்திருக்கிறார்கள். கே.என்.அக்பரின் ஒளிப்பதிவு கொடைக்கானலை கூடுதல் அழகாக காட்டியிருக்கிறது. கே.எம்.ரயானின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ஒகே ரகம் தான்.  கதை எழுதி இயக்கியிருக்கும் பெருமாள் காசி, தலைப்புக்கு ஏற்றபடி படம் முழுவதையும் ஜாலியாக நகர்த்தி சென்றிருந்தாலும், இறுதியில் இளசுகளுக்கு மெசஜ் ஒன்றை அருமையாக சொல்லியிருக்கிறார்.மொத்தத்தில், ‘என்ஜாய்’ இளைஞர்களை மகிழ்விக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து