முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம்: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு : கோவை, பெரம்பலூரில் ஏப்.1 முதல் அமல்படுத்த உத்தரவு

வெள்ளிக்கிழமை, 27 ஜனவரி 2023      தமிழகம்
chennai-high-court 2022-08-29

Source: provided

சென்னை : கோவை, பெரம்பலூர் மாவட்டங்களில் ஏப்ரல் 1ம் தேதி முதல் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை அமல்படுத்த டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை சோதனை அடிப்படையில் கோவை மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் அமல்படுத்த வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதுகுறித்த அறிக்கையை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர். அதன்படி காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மலைப்பகுதிகளில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும்திட்டம் திருப்தி அளிக்கும் வகையில் அமல்படுத்தப்படடுள்ளதாக தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்தது. மேலும், திரும்பப் பெறும் பாட்டில்களை விற்பனை செய்து ஈட்டும் வருவாய் குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பித்தது.

கோவை மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்த திட்டத்தை அமல்படுத்த வேணடும் என டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து