முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூடுபிடிக்கும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வேட்பு மனுதாக்கல் இன்று துவங்குகிறது : 4 பேரை மட்டும் அழைத்து வர வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தல்

திங்கட்கிழமை, 30 ஜனவரி 2023      தமிழகம்
Erode 2023 01 30

Source: provided

ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இன்று வேட்பு மனுத்தாகல் ஆரம்பமாகவுள்ள நிலையில், வேட்பாளர்கள் தங்களுடன் 4 பேரை மட்டும் அழைத்து வர வேண்டும் என்றும், கோஷம் போட கூடாது என்றும் வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா மறைவால் இந்த தொகுதிக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 27-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (31-ந்தேதி) தொடங்கி வருகிற 7-ம் தேதி வரை நடக்கிறது. வேட்பு மனுக்களை வேட்பாளர்கள் 5-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை தவிர்த்து தினமும் காலை 11 மணி முதல் மதியம் 3 மணிவரை வேட்பு மனுக்களை மாநகராட்சி கமிஷனரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சிவக்குமாரிடம் தாக்கல் செய்யலாம்.

வேட்பு மனுக்கள் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மனு தாக்கலின் போது மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்திலே அரசியல் கட்சியினர் நிற்க வேண்டும் என்பதற்காக மாநகராட்சி அலுவலகத்தின் 4 புறமும் 100 மீட்டர் தூரத்துக்கு எல்லை கோடுகள் வரையபப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் வேட்பாளர்கள் தங்களுடன் 4 பேரை மட்டும் அழைத்து வர வேண்டும் என்றும், கோஷம் போட கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நாளை வேட்பு மனு தாக்கல் தொடங்க உள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து