முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மற்றவர்களை, அவர்களின் வேலையை செய்ய விடுங்கள் : மத்திய அரசு மீது கெஜ்ரிவால் காட்டம்

சனிக்கிழமை, 4 பெப்ரவரி 2023      இந்தியா
Kejriwal 2023 02 04

Source: provided

புதுடெல்லி : மற்றவர்களை அவர்களின் வேலையைச் செய்ய விடுங்கள் என்று மத்திய அரசு மீது டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் சாடியுள்ளார். 

மாநில அரசுகள், நீதிபதிகள், விவசாயிகள், வணிகர்கள் என அனைவருடனும் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு சண்டையிட்டு வருவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

தலைமை நீதிபதிகளை கொலீஜியம் நியமனம் செய்வது தொடர்பாக மத்திய அரசுக்கும், சுப்ரீம் கோர்ட்டிற்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து முரண் குறித்த செய்தி ஒன்றைச் சுட்டிக்காட்டி இதனைத் தெரிவித்துள்ள கெஜ்ரிவால், மற்றவர்கள் வேலையில் தலையிட வேண்டாம் என்று மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 

நீதிபதிகள், சுப்ரீம் கோர்ட், மாநில அரசுகள், விவசாயிகள், வணிகர்கள் என அனைவருடனும் மத்திய அரசு ஏன் மோதிக்கொண்டே இருக்கிறது? அனைவருடனும் மோதிக் கொண்டிந்தால் நாடு முன்னேற்றப்பாதையில் பயணிக்க முடியாது. நீங்கள், உங்கள் வேலையைப் பாருங்கள். மற்றவர்களை அவர்களின் வேலையைச் செய்ய விடுங்கள். மற்றவர்களின் வேலைகளில் தலையீடாதீர்கள் என்று அந்த பதிவில் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து