முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத்தின் மோா்பி பால விபத்து: 9 பேரின் ஜாமீன் மனு நிராகரிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 5 பெப்ரவரி 2023      இந்தியா
Gujarat-Morphy 2023 01 27

Source: provided

காந்திநகர் : குஜராத்தின் மோர்பியில் நிகழ்ந்த பால விபத்தில் கைதான 9 பேரின் ஜாமின் மனுக்களை கோர்ட் நிராகரித்து விட்டது. 

குஜராத்தின் மோர்பியில் உள்ள மச்சூ நதி மீது கட்டப்பட்டிருந்த பழமையான தொங்கு பாலம் கடந்த அக்டோபர் 30-ம் தேதி திடீரென இடிந்து விழுந்தது. இதில் 135 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து தொடா்பாக, பாலத்தின் புனரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொண்ட ஒரேவா குழுத்துக்கு சொந்தமான நிறுவனத்தின் மேலாளா் இருவா் உட்பட 9 பேரின், போலீசாரால் கைது செய்யப்பட்டனா். 

அந்தக் குழுமத்தின் மேலாளா் ஜெய்சுக் படேல், கைது நடவடிக்கைக்கு முன்பாக மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தாா். இவா்கள்10 பேரின் மீதான குற்றப்பத்திரிகையை போலீசார் கடந்த வாரம் பதிவு செய்தனா். 

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குஜராத் நீதிமன்றம், கீழமை நீதிமன்றம் ஆகியவற்றில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தனர். ஆனால் குஜராத் நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றம் ஆகியவை இந்த 9 பேரின் ஜாமீன் மனுக்களை நிராகரித்து விட்டது. 

இதனால் கைது செய்யப்பட்ட துணை ஒப்பந்ததாரர்கள் 2 பேரை தவிர்த்து மீதமுள்ளவர்கள் மோர்பி மாவட்ட முத்தன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நேற்று முன்தினம் நீதிபதி பி.சி. ஜோஷி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 

மனுவை விசாரித்த நீதிபதி ஜோஷி உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துதல், அலட்சியம், கொலை குற்றம் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் ஜாமின் வழங்க முடியாது என மறுப்பு தெரிவித்து, மனுவை நிராகரித்து உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து