முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி கோதண்டராமர் கோவிலில் பிரம்மோற்சவ விழா இன்று துவக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 19 மார்ச் 2023      ஆன்மிகம்
Tirupati 2023 03 19

Source: provided

திருப்பதி : திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 

இது குறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

திருப்பதி கோதண்டராமர் கோவிலில் இன்று (திங்கட்கிழமை) வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இன்று காலை 8.45 மணியில் இருந்து காலை 9.32 மணி வரை பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடக்கிறது. அதன் பிறகு வாகனச் சேவை நடக்கிறது. 

வாகனச் சேவை தினமும் காலை 8 மணியில் இருந்து காலை 9.30 மணி வரையிலும், இரவு 7 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரையிலும் நடக்கிறது. 

வாகனங்களில் உற்சவர் கோதண்டராமர் தனித்தும், சீதா, லட்சுமணன், ஆஞ்சநேயருடன் இணைந்தும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து