முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பலத்த காற்று, வெள்ளத்தில் மிதக்கும் கலிபோர்னியா: வீடுகளில் மின்சாரமின்றி தவிக்கும் மக்கள்

வியாழக்கிழமை, 23 மார்ச் 2023      உலகம்
California-rain 2023 03 23

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வீசிய பலத்த காற்று மற்றும் வெள்ளம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 

கலிபோர்னியா மாகாணத்தில் பசரோவில் அடுத்தடுத்து உருவான புயல்கள் காரணமாக பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் நீர்நிலைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

கடந்த 2 நாட்களாக கலிபோர்னியாவில் சூறைக்காற்றுடன் கனமழையும் பெய்தது. இதனால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன் கரையோரம் இருந்த வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. முக்கிய சாலைகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்தும் முடங்கியுள்ளது. 

வீடுகள் மற்றும் கட்டிடங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. நெடுஞ்சாலைகள், ரயில் தண்டவாளங்கள் என எங்கும் வெள்ளம் சூழ்ந்து காணப்படுவதால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.  தொடர்ந்து, மின்கம்பங்கள், மரங்கள் உள்ளிட்டவை சாய்ந்ததால் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு பல இடங்கள் இருளில் மூழ்கியுள்ளன. 

இதையடுத்து, தாழ்வான பகுதிகளில் இருந்தவர்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டு வருகின்றனர். இதனால் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து