முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹாட்ரிக் டக் அவுட்: மோசமான சாதனை பட்டியலில் இணைந்தார் சூர்யகுமார் யாதவ்

வியாழக்கிழமை, 23 மார்ச் 2023      விளையாட்டு
23-Ram-52

Source: provided

சேப்பாக்கம்: ஹாட்ரிக் டக் அவுட்டால் மோசமான சாதனை பட்டியலில் இணைந்துள்ளார் சூர்யகுமார் யாதவ்.

கடைசி போட்டி...

இந்தியா -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்று முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 269 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 270 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது. முதல் விக்கெட்டுக்கு ரோகித் சர்மா, சுப்மன் கில் இருவரும் இணைந்து 65 ரன்கள் சேர்த்தனர். 

கோல்டன் டக்... 

ரோகித் சர்மா 30 ரன்களில் ஆட்டமிழக்க, சுப்மன் கில் 37 பந்துகளில் ஆட்டமிழந்தார். விராட் கோலி தன் பங்கிற்கு 54 ரன்கள் சேர்த்துக் கொடுத்தார். ஹர்திக் பாண்டியா 40 ரன்னிலும், ஜடேஜா 18 ரன்னிலும், ஷமி 14 ரன்னிலும் வெளியேறினர். முதல் 2 ஒருநாள் போட்டிகளில் கோல்டன் டக் முறையில் வெளியேறிய சூர்யகுமார் யாதவ் இந்த போட்டியிலும் கோல்டன் டக்கில் வெளியேறி மோசமான சாதனை படைத்தார். தொடர்ந்து 3 ஒருநாள் போட்டிகளில் கோல்டன் டக்கில் வெளியேறிய 6-வது இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை இவர் படைத்திருக்கிறார்.

சச்சின் டெண்டுல்கர்... 

இதற்கு முன்னதாக இந்திய ஜாம்பவன் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் (1994 ஆம் ஆண்டு) ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தொடர்ந்து 3 முறை டக் அவுட்டில் வெளியேறியிருக்கிறார். அவர் மட்டுமின்றி அனில் கும்ப்ளே (1996 ஆம் ஆண்டு), ஜாகீர் கான் (2003-04), இஷாந்த் சர்மா (2010-11), ஜஸ்ப்ரித் பும்ரா (2017 - 2019) ஆகியோர் 3 ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து 3 முறை டக் அவுட்டில் ஆட்டமிழந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 1 week 3 days ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 2 days ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 days ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 3 days ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து