முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மெட்ரோ திட்ட அறிக்கை தயாரிக்க ரூ. 1.35 கோடி ஒதுக்கீடு

ஞாயிற்றுக்கிழமை, 26 மார்ச் 2023      தமிழகம்
Metro-Rail 2022-11-27

Source: provided

மதுரை : மதுரையில் மெட்ரோ ரயில்  திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.1.35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

சென்னைக்கு அடுத்தக்கட்டமாக கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்து அதற்கான திட்டபணிகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. 

மதுரையில் ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரை 31 கிலோ மீட்டர் தூரம் மெட்ரோ ரயில் சேவை அமைக்க நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு விரிவான செயல் திட்ட அறிக்கை தயாரிக்க ஆர்.வி. அசோசியேட் நிறுவனத்துக்கு ரூ.1.35 கோடிக்கான டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 4 நிறுவனங்கள் விண்ணப்பத்திருந்த நிலையில் ஆர்.வி அசோசியேட்ஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் இடம் உள்ளிட்ட அம்சங்களும் விரிவான திட்ட அறிக்கையில் இடம்பெறும் என தகவல் வெளியாகியுள்ளது. 120 நாட்களில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டும் என டெண்டரில் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து