எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
வரும் ஜூன் 7-ம் தேதி இந்திய மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட உள்ளன. இந்நிலையில், இந்தப் போட்டியை முன்னிட்டு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் படம் இடம்பெற்றுள்ள போஸ்டர் ஒன்றை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.
“கடந்த 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை விடவும் தற்போது இந்திய அணி சிறப்பாக செயல்படுமா? சிவப்பு பந்து கிரிக்கெட் மீட்சிக்கான நேரம் இது” என்ற கேப்ஷனுடன் ஐசிசி இந்தப் போஸ்டரை பகிர்ந்துள்ளது. கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, முகமது சிராஜ், அக்சர் படேல், ஜெயதேவ் உனத்கட், அஸ்வின், உமேஷ் யாதவ், புஜாரா ஆகியோர் இங்கிலாந்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
________________
விசாரணை முடியும் வரை காத்திருங்கள்: அனுராக்
பாலியல் குற்றச்சாட்டில் தில்லி காவல் துறையினரின் விசாரணையை முடிக்கும் வரை பொறுமை காக்குமாறு மத்திய விளையாட்டுத் துறை அனுராக் தாக்குர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்திய விளையாட்டுத் துறை அனுராக் தாக்குர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது., தில்லி காவல்துறையினரின் விசாரணையை முடிக்கும் வரை காத்திருக்க மல்யுத்த வீரர்கள் வேண்டும். விளையாட்டு அல்லது விளையாட்டு வீரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கக்கூடாது.
நாங்கள் அனைவரும் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக இருக்கிறோம் என்று தெரிவித்தார். 5 நாள்களில் நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் ஜூன் 5 ஆம் தேதி தில்லி எல்லை முற்றுகையிடப்படும் என்று விவசாய சங்கங்கள் தெரிவித்த நிலையில், மத்திய அமைச்சர் இவ்வாறுஅனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.
________________
டோனிக்கு சாக்ஷி வாழ்த்து
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரான பிரிஜ் பூஷண் சரண் சிங் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக இந்திய மல்யுத்த வீராங்கனைகள் குற்றச்சாட்டு வைத்தனர். அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த மாதம் முதல் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர். இதில், இந்தியாவுக்காக ஒலிம்பிக் உட்பட உலக அளவில் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் பூனியா ஆகியோர் அடங்குவர். இந்தச் சூழலில் தாங்கள் பெற்ற பதக்கங்களை கங்கையில் வீச உள்ளதாக மல்யுத்த வீராங்கனைகள் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில், போராட்டங்களுக்கு மத்தியில் ஐபிஎல் கோப்பையை வென்ற சிஎஸ்கே அணிக்கு சாக்ஷி மாலிக் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். வாழ்த்துடன் தங்களுக்கான நியாயம் மறுக்கப்படும் செய்தியையும் அவர் குறிப்பிட்டுள்ளார். சாக்ஷி தனது டுவிட்டர் பக்கத்தில், “வாழ்த்துகள் டோனி ஜி அண்ட் சிஎஸ்கே... குறைந்தபட்சம் சில விளையாட்டு வீரர்களுக்காகவது அவர்களுக்கு உரிய மரியாதையும் அன்பும் கிடைப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஆனால், எங்களைப் பொறுத்தவரை, நீதிக்கான போராட்டம் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.
________________
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: 2-வது சுற்றுக்கு லக்சயா தகுதி
தாய்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் லக்சயா சென் , தைவான் வீரர் சூ வெய் வாங் ஆகியோர் மோதினர். பரபரப்பான இந்த ஆட்டத்தில் முதல் சுற்றில் பின் தங்கிய லக்சயா சென் அடுத்த 2 சுற்றுகளை கைப்பற்றி வெற்றி பெற்றார். 21-23 , 21 -15 , 21 - 15 என்ற செட் கணக்கில் லக்சயா சென் வெற்றி பெற்றார்.
இதற்கிடையே சர்வதேச பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி முன்னேற்றம் கண்டுள்ளது. அதன்படி பேட்மிண்டன் தரவரிசையில் 5 வது இடத்தில் இருந்த சாத்விக்-சிராக் ஜோடி ஒரு இடம் ஏற்றம் கண்டு 4-வது இடத்தை பிடித்துள்ளனர். இது அவர்களின் சிறந்த தரநிலை என்பது குறிப்பிடத்தக்கது.
_________________
24 வயதில் தேசிய வாலிபால் வீராங்கனை திடீர் மரணம்
கர்நாடக மாநிலம் பெல்தங்கடி தாலுக்காவில் உள்ள படங்கடி பொய்குடே பகுதியைச் சேர்ந்த ஆதம் மற்றும் ஹவ்வம்மா தம்பதியரின் மகள் சாலியத்(24). தேசிய அளவிலான வாலிபால் வீராங்கனை. இவருக்கு கடந்த ஓராண்டுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. இவர் கடந்த ஒரு வருடமாக சிக்கமகளூரில் உள்ள கணவர் வீட்டில் தங்கி இருந்தார்.
செவ்வாய்க்கிழமை அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து உடனடியாக மங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். சாலியத் தேசிய கைப்பந்து போட்டியில் வெள்ளிப் பதக்கம், சீனியர் தேசிய தென் மண்டலப் போட்டியில் தங்கப் பதக்கம் மற்றும் ஜூனியர் தேசிய போட்டியில் மூன்றாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான வாலிபால் போட்டியில் கர்நாடக மாநில அணியை இரண்டாம் இடத்திற்கு கொண்டு வந்ததில் முக்கிய பங்கு வகித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 1 week ago |
-
சென்னை விமானநிலையத்தில் 10 விமானங்கள் ரத்து
08 May 2025சென்னை, சென்னை விமான நிலையத்தில் 10 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்: துரைமுருகனுக்கு சட்டத்துறை ஒதுக்கீடு
08 May 2025சென்னை, தமிழக அமைச்சரவையில் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி அமைச்சர் துரைமுருகனுக்கு சட்டத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் பிளஸ்-2 ரிசல்ட் வெளியீடு: அரியலூர் மாவட்டம் முதல் இடம்
08 May 2025சென்னை, தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் அரியலூர் மாவட்டம் முதல் இடம் பிடித்துள்ளது.
-
ஸ்ரீநகர் உள்ளிட்ட 15 முக்கிய நகரங்களில் பாகிஸ்தான நடத்த இருந்த தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்தது இந்தியா
08 May 2025புதுடெல்லி: ஸ்ரீநகர், பதன்கோட், ஜலந்தர் உள்ளிட்ட இந்தியாவின் 15 நகரங்களில் பாகிஸ்தான் நடத்த இருந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக இந்திய பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது.
-
தொடர்ந்து விழிப்போடு இருங்கள்: பல்வேறு துறை அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்
08 May 2025புதுடெல்லி, மாநில அதிகாரிகள், கள நிறுவனங்களுடன் இணைந்து நெருங்கிய ஒத்துழைப்பை பேண வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.
-
பழனிசாமியின் கபட நாடகங்கள் ஒருநாளும் வெற்றி பெறாது: ஆர்.எஸ்.பாரதி பதிலடி
08 May 2025சென்னை, தி.மு.க.
-
எல்லையை கடக்க முயன்ற பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை
08 May 2025அமிர்தசரஸ், இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லையை கடக்க முயன்ற பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
-
இந்தியா-பாக். போர் பதற்றம்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு
08 May 2025இஸ்லாமாபாத், அமெரிக்க துணைத் தூதரகம் அனைத்து தூதரக ஊழியர்களையும் பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்க உத்தரவிட்டுள்ளது.
-
அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி
08 May 2025சென்னை, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை: பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுக்கு முழு ஆதரவு..!
08 May 2025புதுடெல்லி, இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை உலக நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளது.
-
பாராளுமன்றத்தை கூட்ட ராகுல் காந்தி வலியுறுத்தல்
08 May 2025புதுடெல்லி, பாராளுமன்றக் கூட்டத்தொடரைக் கூட்ட வேண்டும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ராகுல் காந்தி கேட்டுக் கொண்டதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
-
திருச்சி மாவட்டம், துவாக்குடியில் 19.65 கோடி ரூபாய் மதிப்பில் அரசு மாதிரிப்பள்ளிக்கு புதிய கட்டிடம் * 18.91 கோடி ரூபாய் செலவில் விடுதிக் கட்டிடங்கள் * தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
08 May 2025திருச்சி: திருச்சி மாவட்டம், துவாக்குடியில் 19.65 கோடி ரூபாய் மதிப்பில் அரசு மாதிரிப்பள்ளிக்கு புதிய கட்டிடம் மற்றும் 18.91 கோடி ரூபாய் செலவில் விடுதிக் கட்டிடங்க
-
தங்கம் கிராமுக்கு ரூ.55 உயர்வு
08 May 2025சென்னை, சென்னையில் நேற்று (மே.8) தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.55 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,130-க்கு விற்பனையானது.
-
இந்தியா - பாக். இடையே மத்தியஸ்தம் செய்ய தயார் அமெரிக்க அதிபர் அறிவிப்பு
08 May 2025வாஷிங்டன்: இந்தியா- பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய தயார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
மதுரையில் மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்: பக்தர்கள் பரவசம்
08 May 2025மதுரை, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவின் பத்தாம் நாளான நேற்று (மே.8) காலையில் மீனாட்சி சுந்தரேசுவரருக்கு திருக்கல்யாணம் காலை 8.51 மணியளவில் நடைபெற்
-
அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்காத பிரதமர் மோடி..!
08 May 2025டெல்லி, எல்லையில் ஏற்பட்டிருக்கும் போர்ப் பதற்றம் தொடர்பாக நேற்று (மே 8) நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் பிரதமர் மோடி கலந்துகொள்ளவில்லை.
-
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: புதுச்சேரியில் தனியார் பள்ளிகளில் 98.5 சதவீதம் தேர்ச்சி
08 May 2025புதுச்சேரி, புதுச்சேரி, காரைக்காலில் உள்ள தனியார் பள்ளிகளின் பிளஸ் 2 தேர்ச்சி விழுக்காடு 98.5 சதவீதமாகும். இம்முறை அரசுப் பள்ளிகள் சி.பி.எஸ்.இ.
-
ரூ.60 ஆயிரம் கோடியில் தொழிற்கல்வி மேம்பாட்டு திட்டம்:மத்திய அமைச்சரவை ஒப்புதல்
08 May 2025புதுடெல்லி, சென்னை உள்ளிட்ட 5 நகரங்களில் தேசிய திறன் பயிற்சி நிறுவன மேம்பாட்டுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது
-
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தலைவர்கள் முதிர்ச்சியை வெளிப்படுத்தினர்: கிரண் ரிஜிஜு
08 May 2025புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் தொடர்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து அரசியல் தலைவர்களும் முதிர்ச்சியை வெளிப்படுத்தியதாக நாடாளுமன்ற வி
-
கேளிக்கை வரி மசோதாவுக்கு தமிழ்நாடு கவர்னர் ஒப்புதல்
08 May 2025சென்னை, கேளிக்கை வரி மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
-
பாக். ஏவுகணையை இடைமறித்து அழித்த இந்தியா
08 May 2025புதுடெல்லி, பஞ்சாப்பில் பாகிஸ்தான் ஏவுகணை தாக்குதலை இந்திய வான்பாதுகாப்பு அமைப்பு முறியடித்தது.
-
சென்னை வெற்றியால் நெருக்கடி: பிளே ஆப்-க்கு முன்னேறுமா கொல்கத்தா?
08 May 2025கொல்கத்தா, சென்னை வெற்றியால் கொல்கத்தாவின் பிளே ஆப் வாய்ப்புக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சென்னை வெற்றி...
-
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் முக்கிய தீவிரவாதி உயிரிழப்பு
08 May 2025புதுடெல்லி, ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் செயல்பாட்டுத் தலைவரான அப்துல் ரவூப் அசார் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
பா.ம.க. மாநாட்டிற்கு எதிரான மனு: சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி
08 May 2025சென்னை, பா.ம.க. மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
மத்திய அரசுக்கு முழு ஆதரவு: ராகுல் காந்தி
08 May 2025புதுடில்லி, மத்திய அரசுக்கு முழு ஆதரவு அளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.