முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

127 கி.மீ. வேகத்தில் மாற்று தண்டவாளத்தில் சென்றதா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில்? - விபத்து குறித்த அதிர்ச்சி தகவல்கள்

சனிக்கிழமை, 3 ஜூன் 2023      இந்தியா
Coromandel 2023-06-03

Source: provided

புவனேஷ்வர் : சரக்கு ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தண்டவாளத்தில் சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் 127 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேற்குவங்காள மாநிலம் ஷாலிமார் நகரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 12841) இயக்கப்பட்டு வருகிறது. அதே போல், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து மேற்கு வங்காளத்தின் ஹவுராவுக்கு சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 12864) இயக்கப்பட்டு வருகிறது. 

விபத்து நடந்தது எப்படி? 

இந்நிலையில், மேற்குவங்காளத்தின் ஷாலிமாரில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் வந்து கொண்டிருந்தது. அதே போல், கர்நாடகாவின் பெங்களூருவில் இருந்து மேற்கு வங்காளத்தின் ஹவுரா நோக்கி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் சென்றுகொண்டிருந்தது. 

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் பஹாநகர் பஜார் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தது.  அப்போது, அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயில் தண்டவாளத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தவறுதலாக சென்றதாக கூறப்படுகிறது. 

காரக்பூர் ரயில்வே கோட்ட கட்டுப்பாட்டு மையத்தில் இருந்த பெறப்பட்ட முதற்கட்ட தகவல்களின் அடிப்படையில், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பஹாநகர் பஜாரை கடந்த பின்னர் ஒதுக்கப்பட்ட தண்டவாளத்தில் இருந்து தவறுதலாக மாற்று தண்டவாளத்தில் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

விபத்து நடைபெறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு நேற்று முன்தினம் மாலை 6.55 மணியளவில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பஹாநகர் சந்திப்பில் இருந்து மாற்று தண்டவாளத்தில் சென்றுள்ளது. அந்த தண்டவாளத்தில் ஏற்கனவே சரக்கு ரயில் ஒன்று நின்று கொண்டிருந்துள்ளது. 

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மணிக்கு 127 கிலோ மீட்டர் வேகத்தில் சரக்கு ரயில் நின்று கொண்டிருந்த மாற்று தண்டவாளத்தில் சென்றுள்ளது. அப்போது, சரக்கு ரயில் மீது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது. 

மோதிய வேகத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயின் பெட்டிகள் தடம்புரண்டு அருகில் இருந்த தண்டவாளத்தில் விழுந்துள்ளது. அப்போது அந்த தண்டவாளத்தில் பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் வந்துள்ளது. 

இதனால், தண்டவாளத்தில் தடம்புரண்டு கிடந்த சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் மீது பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் மின்னல் வேகத்தில் மோதியது. இதில், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் தூக்கி வீசப்பட்டன. 

இந்த கோர விபத்தில் பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகளும் தடம் புரண்டன. இந்த கோர விபத்தில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 900-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். 

சிக்னல் மற்றும் தொழில்நுட்ப கோளாறு அல்லது மனித தவறு காரணமாக ஒதுக்கப்பட்ட தண்டவாளத்தில் இருந்து மாறி சரக்கு ரயில் நிறுத்தப்பட்டிருந்த தண்டவாளத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சென்றிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 

இதன் காரணமாக சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் சரக்கு ரயில் நிறுத்தப்பட்டிருந்த மாற்று தண்டவாளத்தில் தவறுதலாக சென்று சரக்கு ரயில் மீது மோதியிருக்கலாம். இதன் காரணமாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டு அருகில் இருந்த மற்றொரு தண்டவாளத்தில் தடம்புரண்டிருக்கலாம்.

அப்போது அவ்வழியாக வந்த பெங்களூரு-ஹவுரா எஸ்பிரஸ் ரயில் கோரமண்டல் ரயில் பெட்டிகள் மீது மோதி பெரும் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இருப்பினும், இந்த விபத்து குறித்து ரயில்வே அமைச்சகம் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில் விசாரணை நிறைவடையும் போது தான் 3 ரயில்கள் விபத்துக்கான முழுமையான காரணம் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து