முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திராவில் டிராக்டர் விபத்தில் 6 பேர் பலி

திங்கட்கிழமை, 5 ஜூன் 2023      இந்தியா
Andhra 2023-06-05

Source: provided

ஐதராபாத் : ஆந்திராவில் சுப நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக டிராக்டரில் பயணம் மேற்கொண்டபோது ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் நேற்று டிராக்டர் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த  விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 8 பேர் பலத்த காயம் அடைந்தனர். சுப நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பத்திபாடு மண்டலத்தில் இருந்து பொன்னூர் மண்டலத்திற்கு டிராக்டரில் பயணம் மேற்கொண்டபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 1 week 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 week ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 1 month 1 week ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 2 months 3 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 days ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 2 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து