முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் கூண்டில் சிக்கிய 6-வது சிறுத்தை

புதன்கிழமை, 20 செப்டம்பர் 2023      இந்தியா
Tirupati-2023-05-01

Source: provided

திருப்பதி : ஆந்திர மாநிலத்தில் திருமலை நடைப்பாதையில் பக்தர்களை அச்சுறுத்தி வந்த 6-வது சிறுத்தை சிக்கியுள்ளது. 

திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்ய திருப்பதி அலிபிரியில் இருந்து திருமலைக்கு பாதயாத்திரையாக நெல்லூரைச் சேர்ந்த குடும்பத்தினருடன் சென்ற 6 வயது சிறுமியை சிறுத்தை தாக்கி உயிரிழந்தார்.  இதனைத் தொடர்ந்து, சிறுத்தையை பிடிப்பதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் மற்றும் வனத்துறை இணைந்து பல்வேறு இடங்களில் கூண்டுகள் வைத்தனர். 

இந்த நிலையில் திருப்பதி அலிபிரி நடைப்பாதையில் பக்தர்களை அச்சுறுத்தி வந்த 5வது சிறுத்தை சிக்கிய நிலையில், (செப்.20) நேற்று ஆறாவது சிறுத்தை பிடிப்பட்டுள்ளது. நரசிம்ம சுவாமி கோயில் பகுதியில் வைக்கப்பட்ட கூண்டில் சிறுத்தை சிக்கியது. பிடிப்பட்ட சிறுத்தை உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்வதாக வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும் பக்தர்கள் கவனமுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து