முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்திற்கு காவிரியில் இருந்து 3,000 கனஅடி நீர் திறக்க வேண்டும் : கர்நாடகத்திற்கு காவிரி ஒழுங்காற்றுக்குழு உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 26 செப்டம்பர் 2023      இந்தியா
Cauvery 2023 08 11

Source: provided

புதுடெல்லி : காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டுள்ளது. 

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்த நிலையில், டெல்லியில் கடந்த 18-ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைபெற்றது.   

இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு தினமும் 5,000 கனஅடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டது. மேலும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் அடுத்த கூட்டத்தை 26-ம் தேதி(நேற்று) நடத்த முடிவு செய்யப்பட்டது. 

அதன்படி காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காவிரியில் இருந்து வினாடிக்கு 12,500 கனஅடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. 

தமிழகத்தில் வாடும் பயிர்களை கருத்தில் கொண்டு நீரின் அளவை குறைக்காமல், அக்டோபர் மாதத்திற்கான 20.22 டி.எம்.சி. தண்ணீரை உரிய நேரத்தில் காவிரியில் இருந்து கர்நாடக அரசு திறக்க வேண்டும் எனவும் தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. 

அதே சமயம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 53 சதவீதம் மழை பற்றாக்குறை நீடிப்பதாக கர்நாடக அரசு வாதிட்டது. காவிரியில் இருந்து இதற்கு மேல் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என்றும் கர்நாடக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து தமிழகத்திற்கு காவிரியில் இருந்து 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து