முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெளியேறினார் ஹர்திக் பாண்டியா: குஜராத் புதிய கேப்டன் சுப்மன் கில்

திங்கட்கிழமை, 27 நவம்பர் 2023      விளையாட்டு
Subman-Gill-Virat-Kohli -20

Source: provided

மும்பை : குஜராத் அணியில் இருந்து வெளியேறினார் ஹர்திக் பாண்டியா வெளியேறிய நிலையில் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.

டிசம்பர் 19-ல் ஏலம்...

இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் டி20 தொடரான ஐபிஎல்-ன் 17-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக அந்த சீசனுக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 19-ந்தேதி துபாயில் நடக்க உள்ளது. இதையொட்டி விடுவிக்கப்படும் மற்றும் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை அணி நிர்வாகங்கள் சமர்ப்பிக்க ஐ.பி.எல். அமைப்பு கொடுத்திருந்த காலக்கெடு நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது.

மும்பை அணிக்கு...

இதனிடையே ஹர்திக் பாண்ட்யாவை மீண்டும் மும்பை அணி விலைக்கு வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியது. மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரராக இருந்த ஹர்திக் பாண்ட்யா கடந்த 2022ம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சென்றார். அவர் குஜராத் அணியின் கேப்டனாக நியமிக்கபட்டார். இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.15 கோடிக்கு அதிகாரப்பூர்வமாக விலைக்கு வாங்கியுள்ளது. இதனை குஜராத் அணி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளது.

புதிய கேப்டனாக....

ஹர்திக் பாண்ட்யா விலகிய நிலையில், குஜராத் அணிக்கு புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். இதனையும் குஜராத் அணி தனது எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளது. மேலும் ஒரு முக்கிய பரிமாற்றமாக மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீனை பெங்களூர் அணி விலைக்கு வாங்கியுள்ளது. 

கில் நெகிழ்ச்சி பதிவு

கேப்டனாக பொறுப்பேற்றது குறித்து சுப்மன் கில் தனது எக்ஸ் பக்கத்தில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். அதில், 'குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றதற்கு பெருமையடைகிறேன். இவ்வளவு அருமையான அணியை வழிநடத்துவதற்கு என் மேல் நம்பிக்கை வைத்ததற்கு குஜராத் அணியின் நிர்வாகத்திற்கு நன்றி கூறுகிறேன். இதனை மறக்க முடியாத ஒன்றாக மாற்றுவோம்' என பதிவிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 days ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 days ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 5 hours ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 hours ago
View all comments

வாசகர் கருத்து