முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நண்பர்களை சந்திப்பது மகிழ்ச்சி: வைரல் செல்பி குறித்து பிரதமர் மோடி பதிவு

சனிக்கிழமை, 2 டிசம்பர் 2023      இந்தியா
Modi 2023 07 30

Source: provided

புதுடெல்லி : நண்பர்களை சந்திக்கும் நிகழ்வு மகிழ்ச்சி என்று வைரல் செல்பி குறித்து பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

இத்தாலியன் பிரதமர் ஜியார்ஜியா மெலோனி உடன் பிரதமர் நரேந்திர மோடி எடுத்துக் கொண்ட செல்ஃபி வைரலானதைத் தொடர்ந்து, எக்ஸ் பக்கத்தில் அதுகுறித்து பதிவிட்டுள்ளார் மோடி. துபையில் நடைபெற்ற காப்28 பருவநிலை மாநாட்டில் கலந்து கொண்ட மோடி இத்தாலி பிரதமர் உடன் செல்ஃபி எடுத்துள்ளார். இதனை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த ஜியார்ஜியா,  ‘காப்28-ல் நல்ல நண்பர்கள்’ எனக் குறிப்பிட்டிருந்தார். இருவரின் பெயரையும் இணைத்து ‘மெலோடி’ என்கிற ஹேஷ்டேக்கும் பதிவிட்டிருந்தார்.

இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில், ஜியார்ஜியாவின் பதிவைப் பகிர்ந்த மோடி,  “நண்பர்களைச் சந்திப்பது எப்போதும் மகிழ்வளிக்கக் கூடியது” எனப் பதிவிட்டுள்ளார்.  ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைமையில் நடைபெறும் பருவநிலை பாதுகாப்பு நாடுகள் கூட்டமைப்பின் மாநாடு(காப்28) துபையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மோடி, இத்தாலி பிரதமர் உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் அதிகாரிகளையும் சந்தித்து வெள்ளிக்கிழமை நாடு திரும்பியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 days ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 days ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 11 hours ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 12 hours ago
View all comments

வாசகர் கருத்து