முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் கனமழை பாதிப்பு: 2-வது நாளாக ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

புதன்கிழமை, 6 டிசம்பர் 2023      தமிழகம்
CM-1 2023-12-06

Source: provided

சென்னை : சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று 2-வது  நாளாக ஆய்வு மேற்கொண்டார். 

சென்னையில் பெய்த புயல்-மழையால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒரு சில பகுதிகளில் மட்டுமே மழை நீர் வடிந்துள்ள நிலையில் பெரும்பாலான சாலைகளில் இன்னும் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. 

முதல்வர் மு.க.ஸ்டாலின் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை நேற்று முன்தினம் ஜீப்பில் சென்று பார்வையிட்டார். நேரு ஸ்டேடியம் அருகே உள்ள கண்ணப்பர் திடல், வால்டாக்ஸ் சாலை, பெரியமேடு உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு அரசின் சார்பில் நிவாரண உதவிகளை வழங்கினார்.

இந்நிலையில், நேற்று 2-வது நாளாக தென்சென்னை பகுதியான தரமணி, துரைப்பாக்கம் பகுதிக்குச் சென்று வெள்ளத்தில் தவிக்கும் மக்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டார். மழை நீரை வடிய வைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மக்களிடம் அவர் தெரிவித்தார்.

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, போர்வை, பிரட், பிஸ்கட் பாக்கெட் போன்ற அத்தியாவசிய பொருட்களையும் வழங்கினார். 

நிவாரண பொருட்களை பெறுவதற்கு ஏராளமான மக்கள் நீண்ட கியூ வரிசையில் காத்து நின்றிருந்தனர். அவர்களை போலீசார் ஒழுங்குபடுத்திய வண்ணம் இருந்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மழை சேத பாதிப்புகள் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விரிவாக எடுத்துக் கூறினார். 

அவருடன் அமைச்சர் கணேசன், தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., அரவிந்த் ரமேஷ் எம்.எல்.ஏ. மேயர் பிரியா, ஆணையாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். 

அதன்பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் மெரீனா கடற்கரை சாலையில் உள்ள நேப்பியர் பாலம் பகுதிக்குச் சென்றார். அங்கு கூவம் நதி கடலில் கலக்கும் இடத்தில் திடக் கழிவுகள் அகற்றப்படுவதை பார்வையிட்டார். மெரீனா கடலில் கூவம் ஆற்று தண்ணீர் கலக்கும் பகுதிக்குச் சென்றும் முதல்வர்  பார்வையிட்டார். பின்னர் அவர் அதிகாரிகளுடன்  ஆலோசனை மேற்கொண்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து