முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மிக்ஜாம் பாதிப்பு: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளி அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு: தமிழக அரசு

புதன்கிழமை, 6 டிசம்பர் 2023      தமிழகம்
TN 2023-04-06

Source: provided

சென்னை : சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இந்த 4 மாவட்டங்கள் தவிர, மற்ற அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வுகள் வழக்கம்போல் நடைபெறும் எனவும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 

அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நாளை(இன்று) முதல் அரையாண்டுத் தேர்வு நடத்தப்பட உள்ளதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. மழையால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் தவிர, அனைத்து மாவட்டங்களிலும் திட்டமிட்டபடி, அரையாண்டுத் தேர்வு நடைபெறும். 

இந்த 4 மாவட்டங்களில் மட்டும் நிலைமை சீரானவுடன், அந்தந்த தலைமை ஆசிரியர்களுக்கு முழு அதிகாரம் அளித்து தனித்தனியாக வினாத்தாள் தயாரித்து அரையாண்டுத் தேர்வு நடத்திட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அறிவுறுத்தியதின் அடிப்படையில் இச்செய்திக் குறிப்பு வெளியிடப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து