முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீலகிரி, கச்சிகுடா எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே

வியாழக்கிழமை, 7 டிசம்பர் 2023      தமிழகம்
Tairn 2023-05-25

சென்னை, நீலகிரி, கச்சிகுடா எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

'மிக்ஜம்' புயல் காரணமாக சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் அதிகனமழை கொட்டி தீர்த்தது. 36 மணி நேரம் இடைவிடாது கொட்டிய கனமழையால் சென்னை மாநகரமே தத்தளித்தது. இதன் காரணமாக, தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி கடல்போல் காட்சி அளிக்கிறது. மழை ஓய்ந்தபிறகும் வெள்ளம் வடியாததால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த மக்கள் மிகுந்த அவதி அடைந்துள்ளனர். கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் மற்றும் நிவாரண பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்த கனமழை காரணமாக கடந்த ஒரு வாரமாக பல்வேறு ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில் நேற்றும் ரெயில்கள்  ரத்து செய்யப்பட்டது. அதன்படி, செங்கல்பட்டில் இருந்து நேற்று தெலுங்கானாவின் கச்சிகுடா செல்லும் விரைவு ரயில் மற்றும் மேட்டுப்பாளையத்தில் இருந்து நேற்று சென்னை சென்ட்ரல் வரும் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகிய ரெயில்களை ரெயில்வே நிர்வாகம் முழுவதுமாக ரத்து செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து