முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூத்துக்குடியில் தரைதட்டி நின்ற சரக்கு கப்பலை மீட்கும் பணி தீவிரம் : உரம் இறக்குமதி பாதிப்பு

சனிக்கிழமை, 9 டிசம்பர் 2023      தமிழகம்
Tuticorin 2023-12-09

Source: provided

தூத்துக்குடி : தூத்துக்குடி துறைமுகத்தில் தரைதட்டி நிற்கும் சரக்கு கப்பலை இழுவை கப்பல் மூலம் மீட்கும் பணி தொடங்கியுள்ளது. 

 தூத்துக்குடி துறைமுகத்தில் அத்தியாவசிய பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதே போல தூத்துக்குடி துறைமுகத்தில் ஜென்கோ கிரியேட்டர் என்ற சரக்கு கப்பல் தரை தட்டி நின்றது. இந்த கப்பல் எகிப்து நாட்டில் இருந்து சுமார் 55,000 மெட்ரிக் டன் உரத்தை ஏற்றி வந்துள்ளது. இந்த கப்பலானது கடந்த 7-ம் தேதி தூத்துக்குடி துறைமுகம் வந்தது.

ஆனால் துறைமுகம் உள்ளே வர அனுமதி இல்லாததால் துறைமுகத்தின் வெளிப்பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தது. அதன்பின் நேற்று முன்தினம் காலை கப்பலை துறைமுகம் உள்ளே வர அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து கப்பலானது துறைமுக நுழைவு வாயில் அருகே வந்தபோது சற்று மேடான இடத்தில் சென்றதால் கப்பல் தரத்தட்டி நின்றது. 

எனவே கப்பலில் பணிபுரியும் ஊழியர்கள் கப்பலை மீட்கும் பணியில் ஈடுபட்டு தோல்வி அடைந்தனர். இந்நிலையில் அந்த கப்பலை நேற்று இழுவை கப்பல் மூலம் இழுத்து வரும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுமார் 55,000 டன் உரம் ஏற்றி வந்த கப்பலானது தரை தட்டி நின்ற கப்பலை மீட்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து