Idhayam Matrimony

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாதம் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்: த.வெ.க. நிர்வாகி

செவ்வாய்க்கிழமை, 14 அக்டோபர் 2025      தமிழகம்
Vijay-2-2025-09-13

Source: provided

கரூர் : கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தி னருக்கு மாதம் ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும் என்று த.வெ.க. நிர்வாகி அறிவித்துள்ளார்.

கரூரில் கடந்த மாதம் 27-ம் தேதி த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக த.வெ.க. கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு அடைக்கலம் கொடுத்ததாக த.வெ.க. கரூர் நகர பொறுப்பாளர் பவுன்ராஜையும் போலீசார் கைது செய்துள்ளனர். கரூர் கூட்ட நெரிசல் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், த.வெ.க. மாநில இணை செயலாளர் நிர்மல் குமார் உள்பட சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதனிடையே, கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 20 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று த.வெ.க. தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாதம் தலா 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று த.வெ.க. நிர்வாகியும், ஜேப்பியர் தொழில்நுட்ப கல்லூரி தலைவருமான மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 19 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 19 hours ago
View all comments

வாசகர் கருத்து