முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலையில் தமிழகத்தை சேர்ந்த சிறுமி உயிரிழப்பு

ஞாயிற்றுக்கிழமை, 10 டிசம்பர் 2023      தமிழகம்
Suicide 2023 04 29

Source: provided

சென்னை : சபரிமலையில் தமிழகத்தை சேர்ந்த 12 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 

மண்டல, மகரவிளக்கு பூஜைகளை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16-ம் தேதி திறக்கப்பட்டது. இதனை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். சபரிமலையில் 14 நாட்களில் சுமார் 8 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். 

சபரிமலைக்கு இருமுடி கட்டி வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் திருமலை திருப்பதியில் உள்ளது போல வரிசைகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் சரங்குத்தி அருகே இருந்தே வரிசைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். அங்கு பக்தர்கள் எத்தனை மணிநேரத்தில் தரிசனம் செய்ய முடியும் என்பது உள்ளிட்ட அறிவிப்பு பலகைகளுடன் அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன.

இந்த நிலையில், சபரிமலைக்கு தமிழகத்தில் இருந்து சென்ற குழுவை சேர்ந்த  12 வயது சிறுமி பத்மாஶ்ரீ நெரிசலில் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் கூறுகையில், 

பத்மாஶ்ரீக்கு மூச்சு திணறல், இருதய பாதிப்பு ஏற்கனவே இருந்தது. ஐயப்பனை தரிசனம் செய்ய அழைத்து வந்தோம். ஆனால், பத்மாஶ்ரீ உடல்நலம் பாதிக்கப்பட்டு சபரிமலை புனித தலத்திலேயே உயிரிழந்து விட்டார் என கண்ணீர் மல்க கூறினர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து